பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளையாடிய நடிகை ஒருவரை, 14 நாள் சுகாதார துறை அதிகாரிகள் தனிமை படுத்தி, அவர் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் கேட்டையும் இழுத்து மூடியுள்ளனர்.

மேலும் செய்திகள்: சர்ச்சை ஏற்படுத்திய 'காட்மேன்' வெப் சீரிஸுக்கு எதிராக பிரபல நடிகர் போலீசில் பரபரப்பு புகார்!
 

'பொக்கிஷம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை 'பிந்து' மாதவி. இந்த படத்தை தொடர்ந்து,  'வெப்பம்', 'கழுகு', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார் பிந்து மாதவி. 

மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், வயல் கார்டு போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார். நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் அளவிற்கு கன்டென்ட் கொடுக்க முடியாததால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

மேலும் செய்திகள்: அரை நிர்வாண யோகா... காதலனுடன் கவர்ச்சியாக ஆசனங்கள் செய்து அலம்பல் பண்ணும் இளம் நடிகை... ஹாட் கிளிக்ஸ்!
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, இவருக்கு  எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும், தற்போது 'மாயன்' , யாருக்கும் அஞ்சேல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

கை வசம் படங்கள் இருந்தாலும், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கினாள், பிந்து மாதவி வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில் இவர் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி, மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த அபார்ட்மெண்ட் முழுவதையும் தனிமைப்படுத்தி இருப்பதாக பிந்து மாதவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கொரோனா வைரஸ் பாதிப்பால் முன்னணி இசையமைப்பாளர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
 

மேலும் அப்பார்ட்மெண்ட் கேட்டையும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி விட்டதாகவும், 14 நாட்கள் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 14 நாட்கள் தனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் இதில் பிந்து மாதவி  கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ இதோ: