இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீராம்.
இந்த படத்தை தொடர்ந்து கோலி சோடா, பாபநாசம் படங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான பைசா படத்தில் சோலா ஹீரோவாக மாறிவிட்டார்.
இவரின் சகோதரர் அர்ஜுன் ராம் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். இவர் சினிமாத்துறையில் புகைப்படக்கலைஞராக வர விரும்பியவர்.
இவரின் இழப்பு ஸ்ரீராமின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பு தான். இவரது குடும்பத்துக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ஒரு வேலை இவர் ஹெல்மெண்ட் அணிந்து வண்டியில் சென்றிருந்தால் இவர் உயிர் பிழைத்திருப்பர் , காரணம் இவரது மண்டையில் அடி பட்டது தான் இவரது இறப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் .
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST