இந்த நிலையில் விஜய் வர்மா தற்போது கரீனா கபூர் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோருடன் இணைந்து 'ஜானே ஜான்' படத்தில் நடித்துள்ளார்.

நாடக கலைஞராக தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் பிரபல நடிகர் விஜய் வர்மா. தொழில்முறை நடிப்புப் பயிற்சிக்குப் பிறகு பல பாலிவு படங்களில் அவர் நடித்திருந்தார். எனினும் 2016-ம் ஆண்டில் வெளியான பிங்க் படத்தின் மூலம் அவர் பிரபலமானார். இதை தொடர்ந்து விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாக பாராட்டப்பட்ட பல வெற்றிகரமான படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் வர்மா தற்போது கரீனா கபூர் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோருடன் இணைந்து 'ஜானே ஜான்' படத்தில் நடித்துள்ளார். 

கரீனா கபூர் கான் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள சுஜோய் கோஷ் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர நிலையில், இப்படத்தின் திரைப்படத்தின் தயாரிப்புக் குழு நேற்று ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பல பாலிவுட் பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர். தற்போது விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருக்கும் நடிகை தமன்னாவும் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டார்.

வினைதீர்ப்பன் விநாயகன்.. ஜூனியர்ஸுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய கேப்டன் மில்லர் - மாஸ் கிளிக்!

இந்த பாலிவுட் ஜோடியை "அண்ணா மற்றும் "அண்ணி என்று அங்கிருந்தவர்கள் அழைத்தனர். தமன்னாவும் விஜய்யும் புகைப்படக் கலைஞர்களின் வேடிக்கையான அழைப்புகளை பணிவுடன் புறக்கணித்து, தங்கள் கேமராக்களுக்கு போஸ் கொடுத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

View post on Instagram

விஜய் வர்மா ஒரு சாதாரண கருப்பு சட்டை, பழுப்பு மற்றும் கருப்பு அச்சிடப்பட்ட ப்ரோக்கேட் சூட் மற்றும் கருப்பு ஷூ அணிந்திருந்தார். மறுபுறம், டெனிம் உடை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து, தமன்னா ஸ்டைலான மற்றும் சாதாரண தோற்றத்துடன் ஸ்டைலாக இருந்தார்.

தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் ஒன்றாக வேலை செய்யும் போது டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். அதன்பிறகு பல இடங்களுக்கு அவர்கள் ஒன்றாக செல்ல தொடங்கினர். எனினும் அவர்கள் தங்கள் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் வெளியிடவில்லை.