take blue flim with roja director controversial speech

நடிகை ரோஜாவை வைத்து ஆபாச படம் படம் எடுப்பேன் என இயக்குனர் அஜய் கவுந்தின்யா தெரிவித்துள்ளார்.

சர்ச்சை இயக்குநர் 

சர்ச்சை படங்களை எடுப்பதில் வல்லவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் ஆபாச நடிகையான மியா மல்கோவாவை வைத்து 'ஜிஎஸ்டி' (இது பிரதமர் மோடி வெளியிட்ட ஜிஎஸ்டி அல்ல) காட் செக்ஸ் அண்ட் ட்ருத் படத்தை வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அஜய் கவுந்தின்யா

தெலுங்கு இயக்குனர் அஜய் கவுந்தின்யா இயக்கியுள்ள பூத் பங்களா படத்துக்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அதில் பேசிய அஜய், நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம். எல்.வுமான ரோஜாவை சாடியுள்ளார்.

கண்டுகொள்வதில்லை

தெலுங்கு சினிமா துறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெக்னீசியன்கள் உள்ளனர். படம் மூலம் மட்டுமே தினமும் சம்பளம் வாங்கி பிழைப்பு நடத்துபவர்களும் உள்ளனர். அவர்களின் பிரச்சனைகளை ரோஜா கண்டு கொள்வதில்லை என அஜய் தெரிவித்துள்ளார். 

அக்கறை இல்லை

ரோஜா திரைத்துறையினர் மீது எந்த அக்கறையும் கொள்வதில்லை என தெரிவித்தார்.மேலும் நாடு முழுவதும் உள்ள பிற துறைகளை பற்றி பேசும் ரோஜா திரைத்துறை பற்றி மட்டும் வாய் திறப்பதில்லை என்கிறார் அஜய். 

ரோஜாவை வைத்து ஜிஎஸ்டி 2

தொடர்ந்து பேசிய அவர், ராம் கோபால் வர்மா பார்ன் நடிகை மியாவை வைத்து காட் செக்ஸ் அண்ட் ட்ருத் படத்தை எடுத்திருக்கிறார். நான் ரோஜாவை வைத்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜிஎஸ்டி 2 எடுப்பேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

வலுக்கும் கண்டனம்

அஜய் பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இயக்குனர் அஜய் கவுந்தின்யாவின் அதிரடி பேச்சுக்கு ரோஜா என்ன பதிலடி கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.