பாலிவுட் திரையுலகின் நட்சத்திர குழந்தையாக கருதப்படும் தைமூர் அலிகானின் குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலைக்கார பெண்ணுக்கு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியம் கொடுக்கப்பட்டு வருகிறது.   

பாலிவுட் நட்சத்திரங்களான சைஃப் அலி கான், கரீனா கபூர் தம்பதியரின் குழந்தை தைமூர் அலிகான். இவர் பிறந்தது முதல் பெயர் வைக்கப்பட்டது தொடங்கி ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் வரும் போதும் இணையதளத்தில் வேறு எந்த பாலிவுட் குழந்தைகளுக்கும் இல்லாத ஈர்ப்பு இவர் பக்கம் திரும்புவது வழக்கம். இவருக்கு தைமூர் என்ற பெயர் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அன்று இவரை சூழ்ந்துகொண்ட இணையதள sensation தற்போது வரை இவரை விட்டு அகலவில்லை. 

தற்போது இவர் தொடர்பாக வந்திருக்கும் செய்தியும் ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த பரபரப்புத் தகவல் ஆனது அவரைப்பற்றி அல்லாமல் அவருடைய செவிலித்தாய் பற்றியது. தைமூரின் பெற்றோர் இருவருமே திரையுலகில் மிகவும் பிஸியானவர்கள் என்பதால் இவரை கவனித்துக்கொள்ள சாவித்திரி என்ற செவிலித்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் செய்முறை கவனித்து வருகிறார். இவருக்குக் கொடுக்கப்படும் மாத ஊதியம் குறித்த தகவல் தான் தற்போது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவருக்கு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் தைமூர் உடன் இவர் கூடுதல் நேரம் செலவிட நேர்ந்தால் அதற்கும் சேர்த்து ஒரு லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தைமூர் தமது பெற்றோருடன் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் சாவித்திரி உடன் அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்கான செலவு அத்தனையும் தைமூரின் பெற்றோரே ஏற்றுக்கொள்கின்றனர். இன்னும் திரையுலகையே கண்டிராத தைமூருக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதென்றால், இவரை கவனித்துக் கொள்ளும் சாவித்திரிக்கும் இன்ஸ்டாகிராமில் ரசிகர் பக்கம் உள்ளது.