தனுஷ் பட நடிகை ஒருவர், பிரபல அரசியல்வாதியின் மனைவி மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறி இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

Swara Bhaskar Controversy : பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஒரு பேட்டியில் அதிர்ச்சியூட்டும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். கணவர் ஃபஹத் அஹ்மதுடன் பேட்டிக்கு வந்த ஸ்வரா, நாமெல்லாம் பைசெக்‌ஷுவல்கள் என்று கூறியிருக்கிறார். சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் தனக்குக் கிரஷ் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராஞ்சனா, அனார்கலி ஆஃப் ஆரா போன்ற படங்களில் நடித்த ஸ்வரா, ஜாதி, மற்றும் பாலினம் குறித்துத் தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லி பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். இப்போது பைசெக்‌ஷுவல்கள் பற்றிப் பேசியிருக்கிறார். மக்களை அவரவர் பாட்டுக்கு விட்டால், நாமெல்லாம் பைசெக்‌ஷுவல்கள்தான். ஆனால், ஹெட்ரோசெக்‌ஷுவாலிட்டி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மீது திணிக்கப்பட்ட ஒரு கோட்பாடு. மனித இனம் தொடர இது அவசியம் என்று ஸ்வரா கூறியிருக்கிறார்.

சர்ச்சையை கிளப்பிய ஸ்வரா பாஸ்கர்

பேட்டியில் ஸ்வரா, டிம்பிள் யாதவ் மேல எனக்குக் கிரஷ் இருக்குன்னு சொல்லியிருக்கிறார். முதல்ல டிம்பிள் கபாடியா மேல கிரஷ் இருந்துச்சுன்னும் சொன்னார். இதைக் கேட்டதும் தொகுப்பாளர், ஸ்வராவின் கணவர் ஃபஹத் காதைப் பொத்திக்கச் சொன்னார். ஆனா, நான் இதை ஃபஹத்துக்குச் சொல்லிட்டேன் என்று ஸ்வரா சொல்லிட்டு, டிம்பிள் பத்தி விளக்கம் கொடுத்தார். டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவின் மனைவி ஆவார்.

சமூக வலைத்தளங்களில் இதுகுறித்துப் பெரிய விவாதமே நடக்குது. ஸ்வராவுக்கு எதிராகப் பலர் கருத்து சொல்லியிருக்காங்க. ஸ்வராவின் இந்தக் கருத்துக்குப் பின்னாடி அரசியல் இருக்குன்னு சொல்றாங்க. ஸ்வராவுக்கு இப்பக் கட்சியில டிக்கெட் வேணும். அதனால டிம்பிளைப் புகழ்றாங்கன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருக்கார். ஸ்வராவின் கணவர் ஃபஹத், சமாஜ்வாதி கட்சித் தலைவர். ஸ்வராவும் கட்சியில சேர வாய்ப்பிருக்குன்னு சிலர் சொல்றாங்க. பைசெக்‌ஷுவல் நாமெல்லாம் இல்ல, நான் மட்டும்தான்னு ஸ்வரா சொல்லணும்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருக்கார்.

இன்னும் சிலர் ஸ்வராவுக்கு ஆதரவா கருத்து சொல்லியிருக்காங்க. இப்படி ஒரு விஷயத்தைச் சொல்ல ஸ்வரா தைரியமா இருந்தது பாராட்டுக்குரியதுன்னு சிலர் கருத்து சொல்லியிருக்காங்க. இப்போதைக்கு ஸ்வரா, சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் நடிக்காம இருக்காங்க. 2023-ல் ஸ்வராவுக்கும் ஃபஹத்துக்கும் ரபியா என்ற மகள் பிறந்தாள். கல்யாணம் ஆன 9 மாசத்துலயே ரபியா பிறந்தாள். இப்போதைக்குக் கணவர், மகளோட நேரத்தைச் செலவு பண்ற ஸ்வரா, சமூக வலைத்தளங்கள்ல ஆக்டிவா இருக்காங்க. முன்னதாக கணவரோட மதத்தை அவமதிச்சவங்களுக்கு ஸ்வரா தக்க பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.