பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஃபஹத் அகமதுவை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஃபஹத் அகமதுவை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

இந்த நிலையில் சிகாகோவை தளமாகக் கொண்ட பத்திரிகை ஆசிரியரும், அறிஞருமான டாக்டர் யாசிர் நதீம் அல் வாஜிதி, வெவ்வேறு நம்பிக்கைகளை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செல்லாது என்று அறிவித்தார். ஸ்வாரா மற்றும் ஃபஹத் திருமணம் 'இஸ்லாமிய ரீதியாக செல்லாது' என்று கண்டனம் செய்தார்.

Scroll to load tweet…

இதையும் படிங்க..Karnataka : யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?

ஏனெனில் ஸ்வாரா பாஸ்கர் ஒரு பல தெய்வ வழிபாடு கொண்ட பெண். எனவே இத்திருமணம் செல்லாது என்று கூறினார். இதற்கு ஆர்.ஜே சயீமா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் மற்றும் பிரேம் ரத்தன் தன் பாயோ போன்ற பிரபலமான ஹிந்தி படங்களில் விருது பெற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஸ்வரா பாஸ்கர் ஒரு பிரபலமான இந்திய நடிகை ஆவார்.

Scroll to load tweet…

இவர் இதுவரை இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி 3 முறை பிலிம்பேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். இந்த நிலையில் ஸ்வாரா பாஸ்கர் ட்விட்டரில், ஃபஹத் ஜிராரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..இப்படித்தான் இருக்கு 21 மாத திராவிட மாடல் ஆட்சி.? ஓபிஎஸ் கொடுத்த திடீர் ட்விஸ்ட் - அதிர்ச்சியில் திமுக !!