கொரோனா வைரஸ்,  சீனாவில் துவங்கி இப்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் பெரும் தோற்று நோயாக உருவெடுத்துள்ளது. சீனாவில் பல்லாயிர கணக்கான உயிர்களை பலி வாங்கிய பின், தற்போது இத்தாலி நாட்டில் கோரா தாண்டவம் ஆடி வருகிறது.

இதனை கட்டு படுத்த வளர்த்த நாடுகளே திணறி வரும் நிலையில், இந்தியா முழு ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு கூறியுள்ளது. 

எனவே இந்தியாவில் மக்களையும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். முடிந்த வரை பலர் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய அன்றாட பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் கிருமியை அழிக்கும் மாத்திரம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட வீடியோவை நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள்.

இதில்  ‘அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள். இந்த மந்திர சப்தம் வீட்டில் ஒலிக்கட்டும் என்று கூறி இந்த வேதம் ஒலிக்கும் ஒரு வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸை கூட இந்த மாத்திரம் அழிக்கும் என்பது போல் பதிவிட இவர்... பதிவிட பல விமர்சனங்கள் பறந்து வருகிறது.