Suzhal 2 Review : புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள சுழல் சீசன் 2 வெப் தொடரின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.
விக்ரம் வேதா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி, இணைந்து தயாரித்துள்ள வெப் தொடர் தான் சுழல். இந்த வெப் தொடரின் முதல் சீசன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வேறலெவல் ஹிட் அடித்தது. முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து சுழல் வெப் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது உருவாகி இருக்கிறது. இதை பிரம்மா மற்றும் அர்ஜுன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். முதல் சீசனில் நடித்த கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இந்த சீசனிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் நடிகைகள் சம்யுக்தா, மஞ்சிமா மோகன், கெளரி கிஷான், மோனிஷா, நடிகர் லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த வெப் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார். இந்த வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Suzhal 2 : நெக்ஸ்ட் சம்பவம் லோடிங்; அதகளமாக ரிலீஸ் ஆன சுழல் 2 டிரைலர்

சுழல் 2 மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்தேன், ஆனால் ஏமாற்றம் அடையச் செய்தது. முதல் சீசன் அளவுக்கு இந்த சீசன் இல்லை. ஆனால் நமக்கு போர் அடிக்காமல் விறுவிறுப்பாக உள்ளது. சில நல்ல ட்விஸ்டுகளும் உள்ளன. மொத்தத்தில் இந்த சுழல் சீசன் 2 ஏமாற்றம் அளித்ததாக குறிப்பிட்டு 10க்கு 7 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.
சுழல் சீசன் 2 அருமையாக உள்ளது. 1 மணிக்கு ஆரம்பித்தேன் 6.45வரை ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்தேன். இதற்கு விரிவான விமர்சனம் எழுத முடியுமா என தெரியவில்லை. ஆனால் ஹானஸ்டாக சொல்கிறேன், இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்கள். அதுவும் கிரைம் திரில்லர் ஜானரில் இப்படி செய்துள்ளதற்கு ஸ்பெஷல் பாராட்டு என பதிவிட்டுள்ளார்.
சுழல் மீண்டும் போட்டுத்தாக்கி இருக்கிறது. புஷ்கர் காயத்ரி, பிரம்மா, அர்ஜுனின் உலகத்தர மேக்கிங். அனைவரது நடிப்பும் பிரமாதம் குறிப்பாக அந்த 8 பெண்கள். அவர்கள் தான் படத்தின் உயிர்நாடி. மொத்தத்தில் சுழல் 2 சூப்பர் என குறிப்பிட்டு இருக்கிறார்.
சுழல் 2 முதல் சீசனை போன்று இரண்டாம் சீசனும் ஈர்த்துள்ளது. ஒரு எபிசோடு பார்க்கலாம் என ஆரம்பித்தேன், ஆனால் ஒட்டுமொத்த சீரிஸையும் பார்த்து முடித்துவிட்டேன். குறிப்பாக இரண்டாம் எபிசோடில் வரும் அஷ்டகாளி பாடலும் 8 பெண்களின் கேரக்டர் இண்ட்ரோவும் வேறலெவல். ஒவ்வொரு எபிசோடும் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு இருந்தது. மிஸ் பண்ணிடாதீங்க என பதிவிட்டுள்ளார்.
சுழல் சீசன் 2 ஒர்த்தான வெப் தொடர். புஷ்கர் காயத்ரி தாங்கள் திரைக்கதை மாஸ்டர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள் என ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... டிராகனுக்கு பயந்து ஓடிய விடாமுயற்சி; இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?
