தன்னை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுஷ்மிதா சென் பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்த அவரது இஸ்டாகிராம் பக்கத்தில், எனது இருப்பு மற்றும் எனது மனசாட்சி நடுநிலையானது. இயற்கையானது எவ்வாறு அனைத்து படைப்புகளையும் ஒன்றிணைத்து ஒற்றுமையை அனுபவிக்கிறது என்பதை நான் விரும்புகிறேன் என பதிலளித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மாலத்தீவு உள்ளிட்ட உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியிருக்கிறேன். சுஷ்மிதா சென்னுடன் சென்றிருந்தேன். புதிய வாழ்க்கை புதிய பயணம். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன். இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் நடக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவு வைரலானது. இதை அடுத்து நெட்டிசன்கள் பலர் சுஷ்மிதா சென்-ஐ சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தன்னை விமர்சித்தவர்களுக்கு சுஷ்மிதா சென் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Asin : நடிகை அசின் மகளா இது..! அதுக்குள்ள இவ்ளோ வளந்துட்டாங்க... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
இதுக்குறித்த அவரது இஸ்டாகிராம் பக்கத்தில், எனது இருப்பு மற்றும் எனது மனசாட்சி நடுநிலையானது. இயற்கையானது எவ்வாறு அனைத்து படைப்புகளையும் ஒன்றிணைத்து ஒற்றுமையை அனுபவிக்கிறது என்பதை நான் விரும்புகிறேன். அந்த சமநிலையை உடைக்கும் போது நாம் எவ்வளவு பிளவுபடுகிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறிவருகிறது என்பதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது. அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் அறியாமையால் மலிவான மற்றும் சில சமயங்களில் வேடிக்கையான விமர்சனைகளை முன்வைக்கின்றனர்.
எனக்கு இதுவரை இதுவரை இல்லாத நண்பர்கள் மற்றும் நான் சந்தித்திராத அறிமுகமானவர்கள் என அனைவரும் தங்கள் மகத்தான கருத்துக்களையும் எனது வாழ்க்கை மற்றும் குணநலன் பற்றிய ஆழமான அறிவையும் பகிர்ந்து கொள்கிறார்கள். கோல்ட் டிக்கர்' எல்லா வழிகளிலும் பணசம்பாதிப்பவர்கள். நான் தங்கத்தை விட ஆழமாக தோண்டுகிறேன். மேலும் நான் எப்போதும் வைரங்களை விரும்புவேன். அதை நானே வாங்கிக்கொள்கிறேன். எனது நலம் விரும்பிகளும் அன்பானவர்களும் முழு மனதுடன் தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்க நான் விரும்புகிறேன். தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் சுஷ் முற்றிலும் நலமாக இருக்கிறார். காரணம் நான் ஒருபோதும் கைதட்டல்களின் ஒளியில் வாழ்ந்ததில்லை. நான் சூரியன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... பிரபல பாலிவுட் நடிகையின் சகோதரருடன் மாலத்தீவில் மஜா பண்ணும் இலியானா... மீண்டும் காதலில் விழுந்த இடுப்பழகி?
