பிரபல பாலிவுட் நடிகையின் சகோதரருடன் மாலத்தீவில் மஜா பண்ணும் இலியானா... மீண்டும் காதலில் விழுந்த இடுப்பழகி?
Ileana : தமிழில் நண்பன், கேடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானா, தற்போது பிரபல பாலிவுட் நடிகையின் சகோதரர் மீது காதல் வயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை இலியானா, தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் சரிவர போகாததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற அவர் அங்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். இதையடுத்து பிற மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
குறிப்பாக கேடி படத்துக்கு பின் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த இலியானா, ஷங்கர் இயக்கிய நண்பன் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், இப்படத்தில் பெல்லி டான்ஸ் ஆடி பிரபலமானதால் ரசிகர்களால் செல்லமாக இடுப்பழகி என அழைக்கப்பட்டார். இப்படத்துக்கு பின்னர் அவர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாக தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.
இதையும் படியுங்கள்... Udhayanidhi Stalin : இந்தி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்
நடிகை இலியானா அடிக்கடி காதல் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு, அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கல்யாணம் செய்துகொண்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்துகொண்டனர்.
இந்நிலையில், தற்போது நடிகை இலியானா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் புது காதலர் பெயர் செபாஸ்டியன் லாரெண்ட் மைக்கேல். இவர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் ஆவார். நடிகை இலியானா அவரை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் கேத்ரீனா கைஃப் உடன் மாலத்தீவில் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஒருவழியாக ரிலீசுக்கு தயாரானது.. திரிஷா, அரவிந்த் சாமி நடித்த சதுரங்க வேட்டை 2 - எப்போ திரைக்கு வருது தெரியுமா?