பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 6 மாதமாகவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தனது தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கூட பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்... இதோ...!

பாலிவுட்டில் நல்ல நிலைக்கு வளர்ந்து வந்த சுஷாந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டதை அவருடைய ரசிகர்களால் இதுவரை ஜீரணிக்கமுடியவில்லை. இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் ரசிகர்களை கொதிப்படையச் செய்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. 

 

இதையும் படிங்க:   ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?


சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் காரணம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தி, முன்னாள் பிசினஸ் மேனேஜர், மகேஷ் ஷெட்டி, சஞ்சனா சங்கி, தயாரிப்பாளர் முகேஷ் சாப்ரா, பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மா, உறவினர்கள், உடன் தங்கியிருந்தவர்கள் என இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார். அவர்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். 

 

இதையும் படிங்க:  இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலியை சுஷாந்த் தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற பல பிரம்மாண்ட பாலிவுட் படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் அடித்த படி ராம் லீலா, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் நடித்த இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சுஷாந்த் சிங் ராஜ்புட் தானாம். ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டார். அதன் பின்னரே ரன்வீரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து இன்று சஞ்சய் லீலா பன்சாலியிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சஞ்சய் லீலா பன்சாலி மும்பை பாந்த்ராவில் உள்ள காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.