பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 6 மாதமாகவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தனது தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கூட பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 

ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 

இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆண் நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாக அமலா பால்... போட்டி போட்டு சரக்கடிக்கும் வைரல் வீடியோ...!

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தி, முன்னாள் பிசினஸ் மேனேஜர், மகேஷ் ஷெட்டி, சஞ்சனா சங்கி, தயாரிப்பாளர் முகேஷ் சாப்ரா, பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மா, உறவினர்கள், உடன் தங்கியிருந்தவர்கள் என இதுவரை 41 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார். அவர்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

இதனிடையே சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங்கை ரியா தற்கொலைக்கு தூண்டியதாகவும், பொருளாதாரரீதியாக அவரை ஏமாற்றி விட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணைக்காக மும்பை விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.