Asianet News TamilAsianet News Tamil

ஆண் நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாக அமலா பால்... போட்டி போட்டு சரக்கடிக்கும் வைரல் வீடியோ...!

இப்படி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. 

Amala paul Drinking Video With Friends Going Viral
Author
Chennai, First Published Jul 28, 2020, 8:08 PM IST

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக  2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.  விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

Amala paul Drinking Video With Friends Going Viral

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

Amala paul Drinking Video With Friends Going Viral

பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என அவரது தரப்பில் மறுக்கப்பட்டது. 

Amala paul Drinking Video With Friends Going Viral

இடையில் அமலா பால் தனது ஆண் நண்பருக்கும், ரசிகருக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. இன்னொரு முறை ஆண் நண்பர்களுடன் வேட்டி, சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இப்படி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. குட்டை டவுசரில் ஆண் நண்பர்களுடன் போட்டி, போட்டுக்கொண்டு கண்ணாடி கிளாஸில் இருக்கும் பானம் ஒன்றை குடித்து விட்டு துள்ளி குதிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

Follow Us:
Download App:
  • android
  • ios