பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவருடைய வீட்டில் இருந்து எவ்வித தற்கொலை கடிதமும் சிக்காதது ரசிகர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தேகத்தை ஆழ்த்தியுள்ளது. 

 


இந்நிலையில் நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் சுஷாந்த் சிங்கின் காதலி அவருக்கு அதிக போதை மருந்துகளை கொடுத்ததாகவும், அதனால் அவர் எப்போதும் மயக்க நிலையிலேயே இருந்ததாகவும் அவரின் பாதுகாவலர் கொடுத்த பகீர் வாக்குமூலமும், ரியாவுக்கு பாதகமாக அமைந்துள்ளது. 

 

 

இதையும் படிங்க: சுஷாந்த் தற்கொலை வழக்கு... கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி?... அதிரடி திருப்பம்...!


இந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் தான் ஓராண்டுகளாக லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும், கடந்த மாதம் ஜூன் 8ம் தேதி வரை ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த வழக்கை விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரி வினய் திவாரி தலைமையிலான குழு மும்பை வந்துள்ளது. 

 

இதையும் படிங்க: பிரம்மாண்ட பட இயக்குநருக்கு எளிமையாக நடந்த திருமணம்... அழகிய ஜோடியின் அசத்தல் புகைப்படங்கள் உள்ளே...!

சுஷாந்த் சிங் மரணம் குறித்து தினமும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.