கம்பேக் கொடுத்தாரா சுசீந்திரன்? 2கே லவ் ஸ்டோரி படத்தின் விமர்சனம் இதோ
சுசீந்திரன் இயக்கத்தில் காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி இருக்கும் 2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். அவர் இயக்கிய முதல் படமே மாபெரும் வெற்றியை ருசித்தது. இப்படத்தின் மூலம் தான் நடிகர்கள் விஷ்ணு விஷால், சூரி ஆகியோருக்கு அடையாளம் கிடைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல திரைப்படத்தை இயக்கினார் சுசீந்திரன். இப்படம் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
பின்னர் விஷால், லட்சுமி மேனன் நடித்த பாண்டியநாடு படத்தை இயக்கினார் சுசீந்திரன். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் புதுமுகங்களை வைத்து ஆதலால் காதல் செய்வீர் என்கிற படத்தை இயக்கினார். பின்னர் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜீவா படத்தை எடுத்தார் அப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின்னர் அவர் இயக்கத்தில் வெளிவந்த ராஜபாட்டை, பாயும் புலி, ஜீனியஸ், ஈஸ்வரன், சாம்பியன், வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே என தொடர்ச்சியாக 10 படங்கள் பிளாப் ஆகின.
இதையும் படியுங்கள்... 2K Kids Love Story | 'Boy Bestie' என்றால் என்ன ? நச்சுனு பதில் சொன்ன இயக்குனர் சுசீந்திரன் !
இதையடுத்த எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு சுசீந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் தான் 2கே லவ் ஸ்டோரி. இன்றைய தலைமுறையினரின் காதலை பற்றி பேசும் இப்படத்தில் ஜகவீர், மீனாட்சி, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், ஜிபி முத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆனந்த கிருஷ்ணனும், எடிட்டராக தியாகுவும் பணியாற்றியுள்ள இப்படம் இன்று காதலர் தினத்தையொட்டி ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.
2கே லவ் ஸ்டோரி திரைப்படம் வழக்கமான பிரெண்ட்ஷிப் காதல் கதை. நல்ல நண்பர்களாக இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறந்த மெசேஜை கொடுத்திருக்கிறது. ஆனால் திரைக்கதையில் முதல் பாதி ஓகே ரகமாக இருந்தாலும் இரண்டாம் பாதி மிகவும் போர் அடிக்கிறது. பால சரவணன், மீனாட்சியின் நடிப்பு அருமை. இயக்குனர் சுசீந்திரனின் கம்பேக்குக்காக வெயிட்டிங் என பதிவிட்டுள்ளார்.
காதலர் தினத்தன்று பார்க்க சிறந்த படமாக 2கே லவ் ஸ்டோரி இருக்கும். நல்ல கண்டெண்ட் உள்ள படம். ஆண், பெண் இடையேயான நட்பு, எதிர்பார்ப்பு, இருவருக்கும் இடையேயான காதலின் வேறுபாடு ஆகியவற்றை கொடுக்கும் ஒரு பக்கா பேக்கேஜ் தான் இந்த படம். மீனாட்சி, ஜெக்வீரின் நடிப்பு வேறலெவலில் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 90-ஸ் கல்ச்சரை அசிங்கப்படுத்தாதீங்க - 2கே லவ் ஸ்டோரி படத்தின் கலகலப்பான ட்ரைலர் வெளியானது!