கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த "காப்பான்" திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் "சூரரை போற்று" படத்தில் நடித்துள்ளார். இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கிய,  இந்தப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளியும், மோகன்பாபு, ஜாக்கி ஷெராஃப், ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் சூர்யா வானில் பறப்பது போன்று வெளியான "சூரரை போற்று" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்து, ட்ரெண்டானது.

 

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தில் டீசருக்கான "மாறா" தீம் மியூசிக் ரேப் பாடலை சூர்யா பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சூர்யா தனது சொந்த குரலில் பாடியுள்ள அந்த பாடலை கேட்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் "சூரரை போற்று" படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  

இந்த சமயத்தில் "தம்பி" ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் பேசிய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், வரும் பொங்கலுக்கு "சூரரை போற்று" படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து "சூரரை போற்று" படத்தின் டீசர் ஹேஸ்டேக்கை சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.