தமிழகத்தில் தற்போது புரியாத புதிராய் அரங்கேறி கொண்டிருக்கும் அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து, பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை வலைத்தளம் மூலம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.இதனை நம் நியூஸ் பாஸ்ட் தளத்திலேயே தெரிவித்திருந்தோம்...
இந்நிலையில் பலர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும், இத்தனை நாள் நடைபெற்ற அரசியல் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நேரத்தில்... இன்று சட்டசபையில் நடைபெற்ற விஷயங்கள் பல சிக்கல்களை உருவாகியுள்ளது.
இன்று சட்டசபையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு பொதுமக்கள் முதல் பல பிரபலங்களும் தங்களுடைய அதிருப்தியான கருத்தையே வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா 'தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அது .....' இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே....' என கூறியுள்ளார்.
இப்படி அவர் கூறியுள்ளது தற்போது கொண்டுவந்துள்ள அரசியல் மாற்றத்தை அவர் ஏற்கவில்லை என்று மறைமுகமாக கூறுவது போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
