Asianet News TamilAsianet News Tamil

அடங்க மாட்றாங்களே... சூர்யாவுடன் இணையும் இயக்குநர் பா.ரஞ்சித்... படு பயங்கர சர்ச்சை கதை..!

அருமை அருமை படத்தை சக்ஸஸ் பண்ற அத்தனை ஃபார்முலாவும் இதுல இருக்கு... 

Surya joins director Pa. Ranjith ... The story of a terrible controversy ..!
Author
Tamil Nadu, First Published Nov 23, 2021, 12:57 PM IST

ஜெய்பீம் படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. இந்நிலையில் அடுத்து சூர்யாவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கதை? சொல்லியுள்ளாராம்.

Surya joins director Pa. Ranjith ... The story of a terrible controversy ..!


அதன்படி, ’’வாங்க ரஞ்சித்... வாங்க, நல்லாருக்கீங்களா ? 

நல்லாருக்கேன் சூர்யா சார். உங்களோட சேர்ந்து கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு பத்தி ஒரு படம் எடுக்கலாம்னு யோசனை. அதுதான் உங்ககிட்ட பேசலாம்னு..

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பா ? அது ரொம்ப கான்ட்றோவெர்ஷியல் சம்பவமாச்சே ? அந்த சப்ஜெக்டெல்லாம் ரொம்ப ரிஸ்கு சார் வேண்டாம்.

இல்ல சார் முழுக்கதையையும் கேட்டுட்டு முடிவு சொல்லுங்க..

ஓகே..

கதைப்படி வைத்தியநாத ஐயருக்கும், வட்டிக்கடை வெச்சுருக்கற ராம்லால் சேட்டுக்கும் பெரிய தொழில் விரோதம். எப்படியாவது ஒருத்தரை ஒருத்தர் போட்டு தள்ளனும்னு நினைக்கறாங்க

ஆஹா ஆரம்பமே அருமையா இருக்கே ? சொல்லுங்கSurya joins director Pa. Ranjith ... The story of a terrible controversy ..!

வைத்தியநாத ஐயரு கறிக்கடை காதரை கூப்பிட்டு, ராம்லால் சேட் வீட்ல பாம் வெக்க சொல்றாரு. காதர் நான் ஈ எரும்புக்கு கூட தொல்லை கொடுத்ததில்ல அப்படியெல்லாம் செய்ய முடியாதுனு சொல்ல, நீ பாம் வெக்கலைன்னா உன் குடும்பத்தையே அழுச்சிருவேன்னு மிரட்டறாரு. வேற வழியில்லாம பாம் வெக்க காதர் சம்மதிக்கறான்.

அரும அரும....

காதருக்கு பாம் தயாரிக்க உதவ, தாதா ராமலிங்கத்துக் கிட்ட உதவி கேக்கறாரு வைத்தியநாத ஐயர். ராமலிங்கமும் அதுக்கு சம்மதிச்சு, ஒரு அம்பது பாம் தயாரிச்சு தன்னோட வீட்ல வேலை செய்யற முனியன் கிட்ட கொடுத்து அனுப்பி வெக்கறாரு....

ஓ புரியுது புரியுது ராமலிங்கம் வீட்ல அந்த அக்கினி சட்டி காலண்டர் வெச்சிருவோம், முனியனுக்கு அம்பேத்கார் பனியன போட்ருவோம்

எப்படி சார் சொல்றதுக்கு முன்னாடியே கண்டு புடிச்சுட்டீங்க ?

காதர்கிட்ட பார்சல கொண்டு போய் கொடுக்கற முனியனுக்கு, 'தான்' கொண்டு வந்தது பாம்னு காதர் சொல்லிதான் தெரியுது. எதுக்கு உங்களுக்கு இந்த வன்முறை எண்ணம்னு முனியன் கேக்க, இதை செய்யலைன்னா வைத்தியநாத ஐயரு, தாதா ராமலிங்கத்தை வெச்சு தன் குடும்பத்தையே அழிச்சிடுவாருங்கற உண்மைய காதர் சொல்றாறு.

ஆமாம் ஆமாம் தாதா ராமலிங்கம் ரொம்ப மோசமானவன்னு ராமலிங்கத்தோட பிளாஷ்பேக் காட்சிய முனியன் சொல்றாரு....

வேற லெவல் சொல்லுங்க சொல்லுங்க. 
ராமலிங்கமும், அவரோட ரௌடி நண்பர்கள் ரெண்டு பேரும் டூவீலர்ல போயிட்டிருந்த போது, செபாஸ்டியன்னு ஒரு ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்த, அவங்கள ராமலிங்கம் குத்தியே கொன்னுட்டாருங்கறதை முனியன் சொல்லி, ஆனாலும் நாம் இதுக்கு உடந்தையா இருக்கக் கூடாதுனு சொல்றாரு.

ஓ..
உயிரே போனாலும் இந்த கொலைபாதக செயல்ல ஈடுபடக்கூடாதுனு ஒத்துக்கற காதர், ராம்லால் சேட்டுக்கிட்ட போயி நடந்ததை எல்லாம் சொல்லி, ஐயா என்ன விட்ருங்கனு கெஞ்சராரு.

ராம்லால் சேட்டு நெத்தியில பெருசா குங்குமத்தை தீட்டிருவோம்...ஆங் கண்டினியூ பண்ணுங்க.

ஒன்னும் கவலைபடாத உன் குடும்பத்த நான் காப்பாத்தறேன்னு, காதர் 
கிட்ட இருந்து பாம்களை எல்லாம் ஒன்னுவிடாம ராம்லால் சேட்டு வாங்கி வெச்சுக்கறாரு.. அதுக்கப்புறம் தன்னோட அடியாள் பூலித்தேவனை கூப்புட்டு, இந்த பாம்களை கோயம்புத்தூர் பூரா பொதுமக்கள் கூடற இடம் பார்த்து வெச்சிட்டு வான்னு சொல்லி அனுப்பறாரு.

அப்படி போடுங்க...

பூலித்தேவரு, ஜவுளிக் கடை, மருந்துக் கடை இப்படி ஒரு இடம் விடாம பாமை வெச்சிட்டு வர, குண்டு மேல குண்டு வெடிச்சு, பல அப்பாவிங்க சாகறாங்க. கோயம்புத்தூர் பொருளாதாரமே நாசமாகுது.Surya joins director Pa. Ranjith ... The story of a terrible controversy ..!

ஆனா கடைசியில ராம்லால் சேட்டும், ராமலிங்கமும், வைத்தியநாத ஐயரும் ஒன்னு கூடி யோசிச்சு, காதர் பாய் மேல பூரா பழியையும் போட்டுட்டு 
தப்பிச்சிடறாங்க. இதை போலீஸ்கிட்ட சொல்ல நினைக்கற முனியனையும் கொன்னுடறாங்க.

கடைசி சீன்ல காதர் ஜெயிலுக்கு போகும் போது ராம்லால் சேட் சிரிச்சுக்கிட்டே பார்த்து "ஜெய்ஹிந்த்" நு நக்கலா சொல்ல, அந்த சோகத்துல கூட "தமிழ்ல பேசுடா நாயேனு" ராம்லால் சேட்டை ஒரு அறை விட்டுட்டு ஜெயிலுக்கு போறாரு 
காதர்பாய்.

அருமை அருமை படத்தை சக்ஸஸ் பண்ற அத்தனை ஃபார்முலாவும் இதுல இருக்கு... நான் உடனே நம்ம ப்ரட்யூஸர் பாஸ்டர் லாசரஸ் கிட்ட பேசிடறேன். அப்புறம் ரஞ்சித்....., படம் டைட்டில முடிவு பண்ணிட்டேன்.

என்ன டைட்டில் சார் ?

"ஜெய் பாம்"

இப்படி ஒரு கதை சொன்னதாக கற்பனை கதை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

****இந்தக் கட்டுரை ஏசியாநெட் செய்தியின் சொந்தக் கருத்து அல்ல. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios