surya jamp on gate and escape the fans
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு, மற்றும் அனிருத்தின் இசையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழில் மட்டும் இன்றி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், 'கேங்' என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகி வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது.
இந்நிலையில், இந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள சூர்யா ராஜமுந்திரியில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கே ரசிகர்கள் அனைவரும் சூர்யாவை சூழ்ந்து கொண்டனர்.

சூர்யாவின் வருகையை அறிந்து பொதுமக்களும் அங்கு கூடினர். இவர்களிடம் இருந்து தப்பிக்க, சூர்யா அந்த திரையரங்கத்தின் பின் பக்க கேட் ஏறிக் குதித்து, ரசிகர்களிடம் இருந்து தப்பித்தார்.
எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சூர்யா சென்றது தான் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இதனால் அடுத்து சூர்யா செல்ல உள்ள பீமாவரம், மற்றும் விஜயவாடாவில் உள்ள திரையரங்கங்களுக்கு அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
