சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கோவில்களைப் பற்றி பேசிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள் ஆனால் பள்ளிக்கூடம், மருத்துவமனையும் முக்கியமான ஒன்று தான். கோவில் உண்டியலில் காசு போடுவதை விட அதற்கு உதவுங்கள் என்று அந்த விழாவில் பேசியிருந்தார். இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கண்டனங்கள் வலுத்துவருகிறது. 

மேலும் செய்திகள்: முதலில் கீர்த்தி சுரேஷ் இதை செய்வாரா? தந்தை வைத்த ஒற்றை கோரிக்கைக்கு குவியும் ஆதரவு!
 

ஜோதிகாவிற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்த நிலையில், அவருக்கு எதிராக பல  திரைத்துறை பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தாள்” படத்தின் டிஜிட்டல் விற்பனை பல கோடிகளுக்கு கைமாறியுள்ளது. 

தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் அனைத்தும் மே 3ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்: 70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர்! கர்ப்பமான மூன்றாவது மனைவி..! ரசிகர்கள் வாழ்த்து..!
 

அப்படி கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்தாலும் ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதில் ஆரம்பித்து, பிரபல நடிகர்களின் படங்களோடு மல்லுகட்டுவது ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து வர வேண்டியிருக்கும். அதனால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை நேரடியாக அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புதுமுக இயக்குநரான ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்த இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுவும் வெளியாகாத நிலையில், “பொன்மகள் வந்தாள்” படத்தின் விளம்பரத்திற்காகவே ஜோதிகா கோவில்கள் குறித்து சர்ச்சை கருத்தை பேசியிருக்கலாம் என்று சிலர் சாடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்: முதல் நாள் பள்ளிக்கு சிரிச்சிகிட்டே போனேன்..! புகைப்படம் வெளியிட்ட முன்னணி நடிகை! யார் தெரியுமா?
 

இது ஒருபுறம் இருக்க, மனைவியின் பொன்மகள் வந்தால், படத்தை திரையரங்குகளில் திரையிடாமால் நேரடியாக ஒடிடியில் திரையிட முடிவெடுத்த சூர்யா நிறுவனங்களுக்கும், அவர் சார்ந்த நிறுவனத்திற்கும் ரெட் கார்ட் விதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே பேச்சு அடிபட்டு வருகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்பட்டால், பெரிய படங்களை தவிர, சிறு பட்ஜெட் படங்கள் ஓடிடி பிளாட் பாரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதால், சூர்யாவுக்கு ரெட் கார்டு போடப்படுவதாக வெளியாகும் தகவல் எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.