உலகம் முழுவதும் கொரோனா பயத்தால், உறைந்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரவர் வாழ்க்கையில் சிறு சிறு சந்தோஷங்களும், கஷ்டங்களும், தினம் தோறும் அரங்கேறி கொண்டு தான் உள்ளது.

அந்தவகையில், பிரபல ஹாலிவுட் நடிகர் Richard Tiffany தன்னுடைய மூன்றாவது மனைவி Alejandra Silva தற்போது கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான இவருடைய திரையுலக வாழ்க்கை,  1970ம் ஆண்டு, துவங்கினாலும், 5 வருடத்திற்கு பிறகு தான் ரசிகர்களால் ஒரு நடிகராக அறியப்பட்டார். 1975 Report to the Commissioner படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியா American Gigolo படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

மேலும் செய்திகள்: பிறந்து 9 நாளே பிஞ்சு குழந்தைக்கு ஹார்ட் சர்ஜரி... மனம் உருகி ராகவா லாரன்ஸ் போட்ட பதிவு...!
 

1991 ஆம் ஆண்டு சூப்பர் மாடல் Cindy Crawford என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், 5 வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மாடல் மற்றும் நடிகையான Carey Lowell என்பவரை மணந்தார். அவர்களுக்கு 11 வயதில் மகன் இருக்கும் நிலையில் 2016 ஆம் ஆண்டு  இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

பின்பு கடந்த 2018-ஆம் ஆண்டு சமூக சேவகி Alejandra Silva என்பவரை மணந்து கொண்டார். அவர்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இவருடைய மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: முதல் நாள் பள்ளிக்கு சிரிச்சிகிட்டே போனேன்..! புகைப்படம் வெளியிட்ட முன்னணி நடிகை! யார் தெரியுமா?
 

70 வயதாகும் Richard Tiffany  மிகவும் மகிழ்ச்சியான இந்த தகவலை வெளியிட்டதை தொடர்ந்து அவருக்கு, ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.