பொதுவாக வீட்டிலேயே, அம்மா அரவணைப்பிலும், அப்பாவின் பாசத்திலும் வளர்ந்த குழந்தைகள், முதல் முதலாக பள்ளிக்கு அனுப்பும் போது, பெற்றோரை பிறந்திருக்க முடியாமல் அழுது ஆடம் பிடிக்கும். 

ஆனால், பிரபல  நடிகை நான் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது, அழாமல் சிரித்து கொண்டே சென்றதாக, முதல் நாள் பள்ளிக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். 

அவர் வேறு யாரும் இல்லை நடிகை யாமி கெளதம் தான். தமிழ், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, மராத்தி,  உள்ளிட்ட பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் தமிழில் கெளரவம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகர் ஜெய் நடித்த 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது பாலிவுட் திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் யாமி கௌதம் தன்னுடைய சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு, கூறியுள்ளதாவது,  ''முதல்நாள் பள்ளி அனுபவம். அன்று என்ன நடந்தது என தெரியவில்லை, ஆனால் நான் மிகவும் ஆர்வமாக யூனிஃபார்ம் அனிந்து கொண்டு, அம்மாவும் அப்பாவும் என்னை எங்கு கூட்டி செல்கிறார்கள் என்ற ஆசையோடு சென்றேன்.  இதே ஆர்வத்தோடு நான் எப்போது பள்ளிக்கு சென்றுள்ளேன். என கூறியுள்ளார். இவரின் இந்த ஸ்வீட் மெம்மரீசி ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.