தமிழ் சினிமாவில், உள்ள பிரபலங்களிலேயே மிகவும் அதிக தொகையான 3 கோடி நிதி உதவியை மக்களுக்காக அறிவித்த, பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தற்போது பிறந்து 9 பது நாட்களே ஆன, பிஞ்சு குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், அதற்காக அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்படியும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் முன்வந்து கொடுக்காத பெரிய தொகையை, நிதியாக கொடுத்தது மட்டும் இன்றி, தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு என அடுக்கடுக்காக பல உதவிகளை தொடர்ந்து அறிவித்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

மேலும், ஊரடங்கு பிரச்சனையின் காரணமாக தினமும் வேலைக்கு செல்ல முடியாமல் தினமும் சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வரும், பலருக்கு... தன்னுடைய நண்பர்கள் மூலம் உதவி செய்து வருகிறார். 

மேலும் இவர் தன்னுடைய அம்மாவின் பெயரில் நடத்தி வரும், அறக்கட்டளையின் மூலம்... மருத்துவ உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள ஒரு பதிவு படிப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்துள்ளது.

இதில், அவர் கூறியுள்ளதாவது.. இந்த கொரோனா அச்சுறுத்தல் நேரத்திலும், பிறந்து 9 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

இந்த குழந்தைக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர் மருத்துவர்கள். பிறந்து 9 நாட்களே ஆகும் இந்த குழந்தைக்கு இன்னும் பெயர் கூற வைக்கவில்லை. ராஜமுந்திரியை சேர்ந்த இந்த குழந்தைக்கு இன்று ஹைதராபாத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு என் நன்றிகள்.

இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் நடுவே இவர்கள் செய்யபோகும் செயல் மிக பெரியது. காசு ஒரு முக்கியம் இல்லை. முடிந்தவரை அந்த குழந்தைக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அனைவர் மனதையும் உருகவைத்துள்ளது.