உலக நாடுகளை கடந்து, மெல்ல மெல்ல இந்தியாவின் உள்ளே புகுந்த கொரோனா வைரஸ் தாக்கம், தற்போது பணக்காரர்கள், ஏழை என எவ்வித பாகுபாடும் பார்க்காமல், பந்தாடி வருகிறது.

இதுவரை இதற்க்கு, தடுப்பு ஊசியோ, அல்லது மருந்தோ கண்டுபிடித்து விட்டதாக... எவ்வித உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. அதனால், முடிந்தவரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. 

இப்படி பட்ட கட்டுப்பாடுகளை மீறி வெளியில் செல்வதால், தினம் தோறும்... கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது.

அதே நேரத்தில், கோடிக்கணக்கில் பணம் புழலும் திரையுலகமே... கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. அணைத்து திரையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்கள், மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், தற்போதைய சூழநிலை குறித்து, பேசியுள்ள பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், மலையாள திரையுலக தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பை வகித்து வரும், சுரேஷ், “ரிலீஸுக்கு  26 படங்கள் தயாராக உள்ளது.  இறுதிக்கட்ட பணிகளில் அப்படியே நிற்கிறது. இந்த நிலைமை முழுமையாக சீராகி எப்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. அப்படி மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் போது தயாரிப்பாளருக்கு கை கொடுக்கும் விதமாக, நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், தங்களுடைய சம்பளத்தை 50 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.  

இவரின் இந்த ஒற்றை கோரிக்கைக்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் இதே போல் பாதி சம்பளம் மட்டுமே பெற்று கொள்வாரா? என்கிற கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளது. இந்த கேள்விக்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.