கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் - நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும், நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகா இருவரும் பிரபல நடிகர் ஒருவரின் படத்தை எப்போதும் மிஸ் செய்யாமல் பார்த்து விடுவோம் என சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: கைக்குட்டையில் மேலாடை... ஷாலு ஷம்மு - மீரா மிதுனை மிஞ்சிய இளம் நடிகை! சோசியல் மீடியாவை சூடாக்கிய ஹாட் போட்டோஸ்
 

நடிகை,  ஜோதிகா... பாலியல் வன்முறைகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதத்தில் நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் இன்று காலை, ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான சில மணி நேரங்களில் பலரால் பார்க்கப்பட்டு, தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது.

குறிப்பாக பெண்கள் பலர், ஜோதிகா இதே போன்ற தரமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றும், மனைவியை ஊக்கப்படுத்தும் விதமாக, நடிகர் சூர்யா இதே போல் கருத்துள்ள படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.

மேலும் செய்திகள்: திருமணத்தில் செம்ம ஆட்டம் போட்ட மஹத் - பிராச்சி! முதல் முறையாக வெளியான கொண்டாட்ட வீடியோ!
 

இந்நிலையில் நேற்று 'பொன்மகள் வந்தாள்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா - ஜோதிகா என இருவரும் கலந்து கொண்டனர். அப்போது, எந்த நடிகர் படத்தை மிஸ் பண்ணாமல் பார்ப்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள், ’பிரபல பாலிவுட் நடிகரான ஆயுஷ்மான் குரானா நடித்த படங்கள் அனைத்தையும் தவறாமல் பார்த்து விடுவோம் என்று கூறியுள்ளனர். அவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்துமே சிறப்பான கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்றும் எனவே அவர் நடிக்கும் படங்கள் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்: கவர்ச்சி நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு..! வீட்டுக்குள் புகுந்து 8 பேர் வெறிச்செயல்!
 

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘விக்கி டோனார்’ படம் தான், தமிழில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 'தாராள பிரபு' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான மற்றொரு பாலிவுட் திரைப்படமான அந்தாதூன், நடிகர் பிரஷாந்த் நடிப்பில் ரிமேக் ஆக உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.