சூர்யா படம் அப்ப தியேட்டர்ல இல்லையா? சூர்யா-பாலா கூட்டணி பற்றி உலா வரும் செய்தி! கடும் அப்செட்டில் ரசிகர்கள்!
Suriya 41: சூர்யா ''எதற்கும் துணிந்தவன்'' வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இயக்குனர் பாலா படத்தில் இணைந்து இருக்கிறார்.
சூர்யா ''எதற்கும் துணிந்தவன்'' வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இயக்குனர் பாலா படத்தில் இணைந்து இருக்கிறார்.
எதற்கும் துணிந்தவன்:
சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன்,பாண்டியராஜ் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
எதற்கும் துணிந்தவன் வசூல் சாதனை:
இப்படம் வெளியான 5 நாட்களில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், இதுவரை படம் உலக அளவில் சுமார் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட வாடிவாசல் :
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும், வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியிருந்தது. இதையடுத்து, வருடங்களை கடந்து இந்த படத்தின் ஷூட்டிங் அவசர அவரசரமாக நான்கு நாட்கள் மட்டும் சென்னையில் நடைபெற்றது. இதனால், ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமான புதிய அப்டேட் வெளியாகியிருந்தது.
சூர்யா - பாலா கூட்டணி
ஆம், 18 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் பாலா இருவரும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் முன்னதாக வெளிவந்த நந்தா, பிதாமகன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால், மீண்டும் இவர்களது கூட்டணியால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. ஒரு ரோலில் அவர் மீனவராக நடிக்கிறாராம். சூர்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனவாம்.
சூர்யா -ஜோதிகா தயாரிப்பு :
இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். மேலும், இந்த படத்தில் பிதாமகன் பசங்க ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் இணைந்துள்ளார்.
சூர்யா 41 ஓடிடி ரிலீஸ் ஆகுமா..?
இந்நிலையில் சூர்யா மற்றும் பாலா கூட்டணி சேர்ந்திருக்கும் சூர்யா 41 படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் பரிசீலனை செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியானது.இதையடுத்து, வெளியான எதற்கும் துணிந்தவன் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது சூர்யா 41 படம் ஓடிடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இணையத்தில் உலா வருகிறது. இதனால், ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.