குக் வித் கோமாளியில், நேற்று ஒளிபரப்பான முதல் எபிசோடில் மனோபாலா, வித்யூலேகா, ரோஷினி, சந்தோஷ் பிரதாப், ஆண்டனி தாசன் ஆகியோர் போட்டியாளர்களாக அறிமுகமானார்கள். 

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா, உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் வனிதா முதல் பரிசை வென்றார். அதேபோல் இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் கனி இறுதிப்போட்டியில் வென்றார்.

இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சமே கோமாளிகள் தான், அதன்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இரண்டு சீசன்களிலும் கலக்கினர். வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 3-வது சீசன் தொடங்கி உள்ளது.

நேற்று ஒளிபரப்பான முதல் எபிசோடில் மனோபாலா, வித்யூலேகா, ரோஷினி, சந்தோஷ் பிரதாப், ஆண்டனி தாசன் ஆகியோர் போட்டியாளர்களாக அறிமுகமானார்கள். இந்நிலையில், இன்று வெளியாக உள்ள எபிசோடில், சூர்யா பட ஹீரோயினும் ஒரு போட்டியாளராக களமிறங்க உள்ளாராம். 

சூர்யா நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ஸ்ருத்திகா அர்ஜுன். இதையடுத்து வசந்த பாலன் இயக்கிய ஆல்பம் படத்தில் நடித்த இவர், இப்படத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பின் அவர் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் அவர் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.

View post on Instagram