MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhanush : தலீவரின் ஆசையை நிறைவேற்ற களமிறங்கும் சுள்ளான்... தமிழர்களே உஷார் - தனுஷை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்

Dhanush : தலீவரின் ஆசையை நிறைவேற்ற களமிறங்கும் சுள்ளான்... தமிழர்களே உஷார் - தனுஷை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maran TrollS dhanush : ரசிகர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் நடிகர் தனுஷ் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரை சரமாரியாக தாக்கி பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 27 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Blue Sattai Maran TrollS dhanush
Image Credit : X

Blue Sattai Maran TrollS dhanush

திரைப்பட விமர்சகரும், யூடியூபருமான ப்ளூ சட்டை மாறன், நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், தனுஷின் திரைப்பயணம், அரசியல் நிலைப்பாடு, ஆன்மிக அடையாளம், தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தனது முதல் படத்திலிருந்தே தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் தனுஷ் என குறிப்பிட்டுள்ளார். 'சுள்ளான்' திரைப்படத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவருக்கு "தென்னிந்திய ப்ரூஸ் லீ" என்ற பட்டமும் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். 'Why This Kolaveri Di' பாடல் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய புகழைப் பெற்றதாகவும், அந்தப் பாடலை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டிய சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

Dhanush: விருதை விட தனுஷின் பதில்தான் இப்போது டிரெண்டிங்... என்ன சொன்னார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தனுஷை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
Image Credit : X

தனுஷை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'அசுரன்' போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பு திறனை நிரூபித்த படங்களாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை', 'பரட்டை' போன்ற பழைய திரைப்பட தலைப்புகளில் உருவான படங்களில் நடித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணத்துடனும் தனுஷின் பயணத்துடனும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் வெள்ளை உடை, ருத்ராட்ச மாலை, "ஓம் நமச்சிவாயா" போன்ற ஆன்மிக அடையாளங்களுடன் தனுஷ் பொதுவெளியில் தோன்றத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Dhanush Son : தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா... சூப்பர்ஸ்டார் பேரனின் முதல் பட அப்டேட் வந்தாச்சு...!

Related Articles

Related image1
Dhanush Son : தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா... சூப்பர்ஸ்டார் பேரனின் முதல் பட அப்டேட் வந்தாச்சு...!
Related image2
72nd National Film Awards: 2 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய தனுஷ்..
35
ரஜினியை ஃபாலோ பண்ணிய தனுஷ்
Image Credit : Asianet News

ரஜினியை ஃபாலோ பண்ணிய தனுஷ்

'காலா', 'கபாலி' திரைப்படங்கள் மூலம் ரஜினிகாந்த் குறிப்பிட்ட சமூக அரசியல் பிம்பத்தை உருவாக்கியதைப் போல, 'கர்ணன்', 'அசுரன்', 'கேப்டன் மில்லர்' போன்ற படங்கள் மூலம் தனுஷும் அதேபோன்ற அணுகுமுறையை கடைபிடித்ததாக விமர்சித்துள்ளார்.

"ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்கக் கூடாதா?" என்ற தனுஷின் பழைய பேச்சு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு ட்ரோலுக்கு உள்ளானதாகவும் நினைவுகூர்ந்துள்ளார். 'இட்லி கடை' திரைப்படத்தில் இந்துத்துவ சிந்தனையை பிரதிபலிக்கும் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

45
தேர்வுக் குழுவில் அரசியல்
Image Credit : twitter

தேர்வுக் குழுவில் அரசியல்

'அசுரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றபோது அனைவரும் பாராட்டியதாகவும், பின்னர் தொடர்ந்து தேசிய விருதுகள் கிடைத்தது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தேசிய விருது தேர்வுக் குழுவில் இருந்தவர்களின் அரசியல் பின்னணியையும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனுஷின் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் மற்றும் சித்தாந்த நிலைப்பாடுகள் குறித்தும் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். தனுஷின் குலதெய்வ வழிபாடு மற்றும் அவர் பொதுவெளியில் பயன்படுத்தும் ஆன்மிக வாசகங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

55
தனுஷின் அரசியல் வருகை
Image Credit : Google

தனுஷின் அரசியல் வருகை

சமீபத்தில் தனுஷ் தனது ரசிகர் மன்றம் மூலம் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், அதனை அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக பார்க்கலாம் என்றும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். மேலும், இதன் பின்னணியில் ஒரு தேசிய அரசியல் கட்சியின் ஆதரவு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல் உருவாக்க முயற்சி நடைபெறுகிறது என்றும் அவர் தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளார். இறுதியாக, தமிழக அரசியலில் நடிகர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றும், யாரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT : ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை... ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?
Recommended image2
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Recommended image3
Dhanush: விருதை விட தனுஷின் பதில்தான் இப்போது டிரெண்டிங்... என்ன சொன்னார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Dhanush Son : தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா... சூப்பர்ஸ்டார் பேரனின் முதல் பட அப்டேட் வந்தாச்சு...!
Recommended image2
72nd National Film Awards: 2 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய தனுஷ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved