"இறுதிச்சுற்று" பட புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தாமதமடைந்துள்ளன. லாக்டவுனால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன் முறையாக பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 

தனக்கு விருப்பமான இயக்குநரான ஹரியுடன் 6வது முறையாக சூர்யா கூட்டணி அமைந்துள்ள சூர்யா "அருவா"  படத்தில் நடிக்க உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் சூர்யாவின் 39வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பும் ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க; கையில் மதுக்கோப்பையுடன் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வனிதா... தீயாய் பரவும் போட்டோ...!

இதனிடையே சூர்யா - வெற்றிமாறன் முதல் முறையாக இணையும் படத்திற்கு "வாடிவாசல்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ஜல்லிக்கட்டு தொடர்புடையது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: அடுத்த ஆப்பு இவங்களுக்குத் தான்... பட்டியலை வெளியிட்டு பகீர் கிளப்பிய வனிதா...லிஸ்டில் இருப்பது யார் தெரியுமா?

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான இன்று, வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு, அசத்தலான வாழ்த்துச் செய்தி ஒன்றையும் பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார். 

தம்பி...
இன்று உங்கள் பிறந்த நாள்
என்றும் அது சிறந்த நாள்
இனிய இந்நன்னாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று
தேக பலம்
பாத பலம்
ஆயுள் பலம் பெற்று
வாழிய பல்லாண்டு என வாழ்த்து கூறியுள்ளார். கண்களில் கோபம் கொந்தளிக்க மிரட்டலான லுக்கில் இருக்கும் சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.