ரொமாண்டிக் ரோலக்ஸாக மாறிய சூர்யா! மாஸ் டைட்டில் உடன் வந்த Suriya 44 டீசர்

Suriya 44 Movie Title Teaser : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூர்யா 44 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Suriya 44 Movie offically Titled as Retro gan

சூர்யா 44

கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சூர்யாவின் 44-வது படமான இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

ரெட்ரோ

சூர்யா 44 திரைப்படத்திற்கு கல்ட் என பெயரிடப்பட்டு உள்ளதாக செய்திகள் உலா வந்தன. பின்னர் ஜானி, சாண்டா போன்ற பெயர்களும் அடிபட்டன. ஆனால் இறுதியாக சூர்யா 44 படக்குழுவே அப்படத்தின் டைட்டில் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி அப்படத்திற்கு ரெட்ரோ என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷலாக அப்படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... தோளுக்கு மேல் வளர்ந்த மகன்; ஹீரோயின் போல் ஜொலிக்கும் மகள்! வைரலாகும் சூர்யாவின் பேமிலி போட்டோ

Suriya 44 Movie offically Titled as Retro gan

ரெட்ரோ டீசர் 

அந்த டீசரில் ஒரு நதிக்கரையோரம் பூஜா ஹெக்டே உடன் அமந்திருக்கும் சூர்யா, அவரிடம் தன் காதலை புரபோஸ் பண்ணுகிறார். இடையிடையே ரெட்ரோ லுக்கில் ரோலெக்ஸ் பாணியில் ஒரு கேங்ஸ்டராகவும் வில்லன்களை அடிச்சு துவம்சம் செய்கிறார். மேலும் இப்படத்தில் நெல்லை பாசை பேசி நடித்திருக்கிறார் சூர்யா. இந்த காதல் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் தளபதி பட சீனை அப்படியே ரீக்கிரியேட் செய்தது போல் உள்ளது என கூறி வருகின்றனர்.

எப்போ ரிலீஸ்?

ரொமான்ஸ், ஆக்‌ஷன் என இரண்டும் கலந்து இந்த டீசர் அமைந்திருப்பதால், இதில் சூர்யா ரொமாண்டிக் ரோலக்ஸ் ஆக தெரிவதாக கூறி வருகின்றனர். கங்குவா படத்தில் தோல்வியால் துவண்டு இருக்கும் சூர்யாவுக்கு இப்படம் கம்பேக் படமாக அமையும் என்கிற நம்பிக்கையை டீசர் கொடுக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரெட்ரோ திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... சூர்யா 44 படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios