MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தோளுக்கு மேல் வளர்ந்த மகன்; ஹீரோயின் போல் ஜொலிக்கும் மகள்! வைரலாகும் சூர்யாவின் பேமிலி போட்டோ

தோளுக்கு மேல் வளர்ந்த மகன்; ஹீரோயின் போல் ஜொலிக்கும் மகள்! வைரலாகும் சூர்யாவின் பேமிலி போட்டோ

Suriya Family Photo : நடிகர் சூர்யா தன்னுடைய மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் திருமண விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 24 2024, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya Family

Suriya Family

நடிகர் சூர்யாவுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் தன் நீண்ட நாள் காதலியான நடிகை ஜோதிகாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் போது சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, தன் காதல் கணவருக்காக தனது கெரியரையே உதறித்தள்ளினார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர்.

24
Suriya, Jyothika

Suriya, Jyothika

மகன், மகள் இருவருமே வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார் ஜோதிகா. சென்னையில் தன் தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி உடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த சூர்யா, கடந்த ஆண்டு மும்பையில் செட்டில் ஆனார். தனது மகன் தேவ் மற்றும் மகள் தியாவின் படிப்புக்காக தாங்கள் இருவரும் மும்பையில் குடியேறிவிட்டதாக சூர்யா, ஜோதிகா இருவரும் விளக்கம் அளித்தனர்.

இதையும் படியுங்கள்... சூர்யா 44 படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது!

34
Suriya Jyothika Latest Photo

Suriya Jyothika Latest Photo

தன் பிள்ளைகள் மீது அதீத பாசம் வைத்துள்ள சூர்யா, அவர்கள் பெயரில் தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 2டி என பெயரிட்டுள்ள அந்த நிறுவனத்தில் தன் மகன் மகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்தை தான் 2டி என குறிப்பிட்டிருக்கிறார் சூர்யா. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சூர்யாவும், ஜோதிகாவும் தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வெற்றி வாகை சூடி வருகின்றனர். 

44
Suriya Jyothika Family Photo

Suriya Jyothika Family Photo

இந்த நிலையில் சூர்யாவின் பேமிலி போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது. அதில் சூர்யாவின் மகன், மகள் இருவருமே தற்போது மளமளவென வளர்ந்துவிட்டதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சூர்யாவின் மகன் தேவ், தன் தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்திருக்கிறார். அதேபோல் சூர்யாவின் மகள் ஜோதிகா சினிமா ஹீரோயின் போல் காட்சியளிக்கிறார். இவர்கள் இருவரும் அண்மையில் தங்கள் பெற்றோருடன் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது பேமிலியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... தன்னைவிட 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கியவர் ஜோதிகா – மனைவியை ஆஹா, ஓஹோனு புகழ்ந்து பேசிய சூர்யா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
TRP ரேஸில் சிறகடிக்க ஆசை சீரியலை ஓட ஓட விரட்டி புது வரலாறு படைத்த அய்யனார் துணை..!
Recommended image2
சரவணன் - அஞ்சலி இடையே கள்ளக்காதலா? நேரில் பார்த்து ஷாக் ஆன மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
சாவித்திரியின் சாம்ராஜ்யம் சரிந்தபோது ஜெமினி என்ன செய்தார்?! - திரை மறைவில் நடந்த கண்ணீர் நாடகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved