MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யா 44 படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது!

சூர்யா 44 படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது!

Suriya 44 Movie Title : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூர்யா 44 திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ஷார்ட் அண்ட் ஸ்வீட் டைட்டில் லீக் ஆனது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 24 2024, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya 44

Suriya 44

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. சூர்யாவின் 2 வருட உழைப்பு வீண் ஆனதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு உள்ள சூர்யா, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Suriya

Suriya

அதில் ஒரு படத்தை ஆர்.ஜே.பாலாஜியும் மற்றொரு படத்தை கார்த்திக் சுப்புராஜும் இயக்கி உள்ளனர். இதில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதேபோல் சூர்யா கைவசம் உள்ள மற்றொரு படம் சூர்யா 44.

இதையும் படியுங்கள்... 80ஸ், 90ஸ்களில் ஃபேவரைட்டான மாருதி காரை மையப்படுத்திய கதையில் சூர்யா!

34
suriya 44 Movie Title

suriya 44 Movie Title

சூர்யா 44 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யா 44 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். காதல் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது.

44
suriya 44 Movie Title Leaked

suriya 44 Movie Title Leaked

சூர்யா 44 திரைப்படத்தின் அப்டேட் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது. அதன்படி அப்படத்தின் டைட்டில் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என படக்குழு கூறி உள்ளது. இந்த நிலையில், அப்படத்திற்கு என்ன டைட்டில் வைத்துள்ளார்கள் என்கிற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி சூர்யா 44 படத்துக்கு ‘கல்ட்’ அல்லது ‘ஜானி’ என இரு பெயர்களில் ஒன்று நிச்சயம் இருக்கும் என கூறப்படுகிறது. கங்குவா கவுத்திவிட்டாலும் இப்படம் மூலம் கம்பேக் கொடுப்பாரா சூர்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... நான் சிகரெட் பிடிச்சதே இல்ல; பாலாவுக்காக முதல் முறையாக சிகரேட் பிடிச்சேன்: வணங்கானில் சூர்யா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Songs: கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்.! முப்பது ஆண்டுகளை கடந்தும் நாட்டாமை இசை மனதை மயக்குவது ஏன்?
Recommended image2
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved