suresh raina to debut as a hero in Tamil Cinema : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

suresh raina to debut as a hero in Tamil Cinema : சினிமா மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்களும் அவர்களது தொழிலைத் தவிர்த்து மற்றவற்றிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் ஹோட்டல் உள்ளிட்ட பிஸினஸ் செய்து வரும் நிலையில் கிரிக்கெட் பிரபலங்களும் அதே போன்று கிரிக்கெட் தவிர சினிமாவிலும் ஆர்வம் செலுத்தி வரும் நிலையிலும் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பிசினஸூம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ரசிகர்களால் சின்ன தல என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இப்போது ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். சின்ன தல என்றும் அழைக்கப்பட்டார். 226 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 36 அரைசதங்கள் உள்பட 5615 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று 78 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்கள் உள்பட 1605 ரன்கள் எடுத்துள்ளார்.

கிரிக்கெட்டையும் தாண்டி நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து நடத்தி வருகிறார். அதோடு, சுரேஷ் ரெய்னாவும் சமையலில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது அவருக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில விளம்பரங்களில் நடித்திருந்த சுரேஷ் ரெய்னா இப்போது சினிமா மீது முழு கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் லோகன் இயக்குகிறார். டிகேஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ், கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே, எடிட்டர் மோகன் ஆகியோர் உள்பட பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சுரேஷ் ரெய்னாவின் புதிய படத்திற்கான அறிவிப்பு வீடியோவை வெளியிட சுரேஷ் ரெய்னா வீடியோ கால் மூலமாக இந்த நிகழ்ச்சியில் பேசினார். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு சென்னைக்காக நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.

ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. சென்னையில் பீச், ரசம் என்று எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன தல ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம் என்று அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயின், மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

View post on Instagram