Asianet News TamilAsianet News Tamil

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலுக்கு சென்ற ரஜினிகாந்த்... வைரல் வீடியோ..

நடிகர் ரஜினிகாந்த் துபாய் சென்றுள்ள நிலையில், அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலுக்கு சென்றார்.
 

Superstar Rajinikanth visited baps hindu mandir abudhabi dubai  Rya
Author
First Published May 24, 2024, 12:21 PM IST

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் படம் இப்போதும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது..

தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார்.

Gautami: என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடம்! கமல் உடனான ரிலேஷன்ஷிப் குறித்து முதல் முறையாக பேசிய நடிகை கௌதமி!

இந்த நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.  இதில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி. பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிநடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினி ஓய்வுக்காக துபாய் சென்றுள்ளார் ரஜினி. துபாயில் லூலூ மால் உரிமையாளருடன், காரில் வலம் வந்த வீடியோ இனையத்தில் வைரலானது.

Super Star : ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா.. அசத்திய அமீரகம் - இதனால் "தலைவருக்கு" கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

இந்த நிலையில் துபாய் சென்றுள்ள ரஜினியை கௌரவிக்கும் விதமாக வருக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி உள்ளது. கமல்ஹாசன், பார்த்திபன், விஜய் சேதுபதி, சிம்பு, த்ரிஷா ஆகியோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ரஜினியும் இணைந்துள்ளார். கோல்டன் விசா பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபுயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் இந்து கோயிலுக்கு சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் பிரம்மாண்ட மசூதிக்கும் சென்று ரஜினி பார்வையிட்டார். 

 

#Thalaivar visited #AbuDhabiMandir yesterday ❤️❤️#Rajinikanth | #superstar @rajinikanth | #superstarRajinikanth | #Coolie | #Jailer | #Vettaiyan | #Hukum pic.twitter.com/0wxFpMOljj

— Suresh Balaji (@surbalu) May 24, 2024

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios