ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் அதிநவீன தொழிநுட்பத்துடன் உருவாகி உள்ள லே மஸ்க் திரைப்படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் மெர்சலாகிப் போயுள்ளார்.
கோலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது இனிமையான இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவில் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை இவர் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனவை. இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார்.
அதன்படி இவர் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் 99 சாங்ஸ். கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருந்தார் ரகுமான். இதையடுத்து லே மஸ்க் என்கிற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
இதையும் படியுங்கள்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முதல் ஓபிஎஸ் வரை... ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து மழை பொழிந்த அரசியல் தலைவர்கள்

36 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி என்கிற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தத்ரூபமான அனுபவத்தை உணர முடியும். இவ்வாறு அதிநவீன தொழிநுட்பத்தில் உருவாகி உள்ள இப்படத்தை முதன்முதலில் கேன்ஸ் திரைப்படம் விழாவில் திரையிட்டு பாராட்டுக்களை பெற்றார் ரகுமான்.
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கும் இப்படத்தை போட்டுக்காட்டி இருந்தார். இன்று ரஜினியின் பிறந்தநாளையொட்டி படம் பார்த்தபின் ரஜினி கொடுத்த ரியாக்ஷனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் படத்தை பார்த்து வியந்துபோன ரஜினி, வேறலெவல் சார் என சொல்லி ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து வாழ்த்தும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்... சினிமாவை தொடர்ந்து... அண்ணாச்சியின் அடுத்த டார்கெட் அரசியலா? - லெஜண்ட் சரவணன் சொன்ன ஷாக்கிங் பதில்
