மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முதல் ஓபிஎஸ் வரை... ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து மழை பொழிந்த அரசியல் தலைவர்கள்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நடிகர் ரஜினிகாந்த்துக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் போட்டுள்ள டுவிட்டில், “எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
பாட்டளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், “இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டுள்ள டுவிட்டில், “இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி போட்டுள்ள டுவிட்டில், “தாதா சாகேப் பால்கே மற்றும் பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ள தலைசிறந்த நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உடன் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... நடிச்சது ஒரே ஒரு விளம்பரம்.. அதன்பின் கோடி ரூபாய் கொடுத்தாலும் ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன்?