ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் மறைவு.. கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் - முதல்வரும் இரங்கல் தெரிவித்தார்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்.

Superstar Rajinikanth and MK Stalin mourns for the demise of Judo rathnam

புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டரான ஜூடோ ரத்னம் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமலுக்கு பல்வேறு படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி 1200 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியதன் காரணமாக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று இருந்தது.

ஜூடோ ரத்னம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி அரசியலிலும் சில காலம் ஈடுபட்டு வந்த அவர், வயது முதிர்வின் காரணமாக நேற்று காலமானார்.

இதையும் படியுங்கள்... தினமும் சரக்கடிப்பேன், கணக்கே இல்லாம சிகரெட் பிடிப்பேன்... என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி லதா- ரஜினிகாந்த்

Superstar Rajinikanth and MK Stalin mourns for the demise of Judo rathnam

ஜூடோ ரத்னத்தின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை ஜூடோ ரத்னத்தின் வீட்டுக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார் ரஜினி. ஜூடோ ரத்னம், ரஜினி நடித்த 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருந்தார்.

அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூடோ ரத்னம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ரஜினி - கமல் படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர்... கின்னஸ் ரெகார்டு பிரபலம் ஜூடோ ரத்னம் காலமானார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios