ரஜினி - கமல் படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர்... கின்னஸ் ரெகார்டு பிரபலம் ஜூடோ ரத்னம் காலமானார்!
ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெய்ஷங்கர், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டாண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள, ஜூடோ கே.கே.ரத்னம் காலமானார்.

தமிழ் திரையுலகச் சேர்ந்த, மூத்த ஸ்டண்ட் கலைஞரான ஜூடோ ரத்தினம், 1966 ஆம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடித்த 'வல்லவன் ஒருவன்' திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, எதிரிகள் ஜாக்கிரதை, முத்து சிற்பி, தரிசனம், தங்க கோபுரம், காயத்ரி, உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக ரஜினிகாந்த் நடித்துள்ள முத்துக்காளை, நெற்றிக்கண், கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன், போன்ற படங்களுக்கு இவர் தான் ஸ்டாண்ட் கலைஞராக பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ள ஜூடோ ரத்தினம் நடித்துள்ளார்.
ரஜினி - கமல் படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர்... கின்னஸ் ரெகார்டு பிரபலம் ஜூடோ ரத்னம் காலமானார்!
கடைசியாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான, 'தலைநகரம்' படத்தில் நடித்தார். மேலும் 1980 ஆம் ஆண்டு வெளியான, 'ஒத்தையடி பாதையிலே' என்கிற படத்தையும் தயாரித்துள்ளார். இதுவரை சுமார் 1200 படங்களுக்கு மேல் சென்ட் மாஸ்டராக பணியாற்றி கின்னஸ் ரெகார்டு புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். மேலும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
இவருக்கு 93 வயதாகும் நிலையில், கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இவருடைய இழப்பு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- #judo
- jude ratnam
- judo
- judo k k rathnam
- judo k.k rathnam
- judo kk rathnam interview
- judo rathman exclusive interview
- judo rathnam
- judo rathnam about arjun
- judo rathnam about prabhu
- judo rathnam about rajini
- judo rathnam exclusive interview
- judo rathnam fight
- judo rathnam interview
- judo rathnam latest
- judo rathnam speech
- judo rathnam stunt master
- judo rathnam wiki
- judo. k. k. rathnam
- stunt master judo rathnam
- stunt master judo rathnam interview