ரஜினி, கமலை அடுத்து தற்போது பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றால் அஜித், விஜய் முதலில் இருப்பவர்கள்.
ஆனால் சமீபத்தில் வெளியான ரெமோ படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார், ரெமோ பற்றி இயக்குனரிடம் போனில் வாழ்து கூறினார்.
என்று செய்தி கேட்டிருப்பீர்கள். அவர் அப்படி என்ன தான் சொன்னார் என தெரிந்து கொள்ள நிறைய ரசிகர்கள் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள்.
சரி, ரஜினி என்ன சொன்னார் தெரியுமா...? ஒரு கிரேட் ஸ்டார் பிறந்திருக்கிறார். வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் என கூறினாராம். இதை மிகுந்த மகிழ்ச்சியோடு சிவா ட்விட்டரில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை ரஜினிகாந்த் யாரையும் ஸ்டார் என்று சொல்லி வாழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி சிவா நீ ரொம்ப ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று கூறியுள்ளார். பலரும் இதனை விரும்பி ரீட்வீட் செய்துள்ளார்கள்.
