MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சரவணனின் ரகசியம்.. அஞ்சலியிடம் சொன்ன பொய்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் உடையப்போகும் உண்மை? இன்றைய ஹைலைட்ஸ்!

சரவணனின் ரகசியம்.. அஞ்சலியிடம் சொன்ன பொய்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் உடையப்போகும் உண்மை? இன்றைய ஹைலைட்ஸ்!

Pandian Stores 2 Serial Today Episode HighLights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மனைவி பற்றி அஞ்சலி கேட்க தொடங்கிய உடன் சரவணன் உண்மையை மறைக்க தொடங்கியுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 12 2026, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இப்போது சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. ஒரு புறம் விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வரும் நிலையில் மறுபுறம் சரவணன் மற்றும் அஞ்சலி இருவரும் தங்களது மொபைல் நம்பரை ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டு பேச தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அஞ்சலி தனது கடந்த காலத்தை பற்றி பேசிய நிலையில் சரவணன் மட்டும் தனக்கு நடந்தவற்றை வெளிப்படையாக பேச மறுத்துள்ளார். உன்னுடைய மனைவி என்ன பண்றாங்க, பிரசவத்திற்கு போயிருக்காங்களா என்றெல்லாம் அஞ்சலி கேட்க, சரவணன் தனக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி எதுவும் சொல்லாமல், அவளுடைய அம்மா வீட்டிற்கு போயிருக்கா என்று பட்டும் படாதும்படி பேசினார்.

25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

அதோடு, அஞ்சலி உடனான போன் காலை உடனே கட் செய்துள்ளார். மேற்கொண்டு அவருக்கு பேச விருப்பமில்லை. தனக்கு வேறொரு போன் கால் வந்துக்கிட்டு இருக்கிறது என்று கூறி போனை கட் செய்துள்ளார். ஏன் சரவணன் அப்படி செய்தார் என்று பார்க்கையில், உண்மையில் அஞ்சலி உடனான காதலை அவர் வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது. மேலும், தன்னுடைய விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், இப்போது அதைப் பற்றி எதுவும் சொல்ல அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. அஞ்சலியோ, தன்னைப் பற்றிய உண்மைகளை சொல்லிவிட்டார்.

35
Pandian Stores 2 Serial Latest Twist
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Latest Twist

அதாவது, இருவருக்குமே ஒருவருக்கொருவர் செட் ஆகவில்லை. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இதனால், அவரிடமிருந்து பிரிந்து வந்துவிட்டேன் என்றார். சரவணன் கேட்டது போன்று அவருக்கு விவாகரத்து கிடைக்குமா? அல்லது பாக்கியத்தின் டிராமாவால் தங்கமயில் மீண்டும் பொய்களை அள்ளிவிடுவாரா என்பதை இனி வரும் எபிசோடுகளில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

45
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

எப்போது பாண்டியன் வீட்டில் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான பிரச்சனை பூகம்பமாக வெடிக்க தொடங்கியதோ அன்று முதல் சக்திவேல், முத்துவேல், பழனிவேல் ஆகியோரது காட்சிகளும் சரி, வடிவு, மாரி, காந்திமதி ஆகியோரது காட்சிகளும் சரி ரொம்பவே குறைந்துவிட்டது. பாண்டியன் வீட்டிற்கு விருந்திற்கு சென்ற போது அரசி மற்றும் குமரவேல் இருவருக்கும் இடையில் திருமணம் நடைபெற 100 சதவிகிதம் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தது.

55
Saravanan Anjali Love Story Pandian Stores 2
Image Credit : Jio Hotstar

Saravanan Anjali Love Story Pandian Stores 2

ஆனால், எல்லாமே இயக்குநரின் கையில் தான் இருக்கிறது என்பதை அஞ்சலியின் வருகையை வைத்து கணிக்க முடிந்தது. இதுவே படமாக இருந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது சீரியல் என்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிப்பது என்பது சவாலாகத்தான் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
768 நாட்கள் ஓடி சாதனை; 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே தமிழ் படம்: தமிழ் சினிமாவையே மிரள வைத்த படம் ஹரிதாஸ்!
Recommended image2
கவினின் அம்மா ஏக்கம் தீருமா? விஜி - விக்ரம் சந்திப்பில் நடந்த மாற்றம்! செல்லமே செல்லமே இன்றைய மெகா எபிசோட்
Recommended image3
பாலு மகேந்திரா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. நிலைதடுமாறி கண்ணீர் விட்ட இசைஞானி இளையராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved