MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கூட்டி பெருக்குவதற்கு பதிலாக எஸ்கேப் ஆக நினைத்த சந்திரகலா – வீட்டை சுத்தி காவல் காத்த கார்த்திக் அண்ட் கோ!

கூட்டி பெருக்குவதற்கு பதிலாக எஸ்கேப் ஆக நினைத்த சந்திரகலா – வீட்டை சுத்தி காவல் காத்த கார்த்திக் அண்ட் கோ!

Karthigai Deepam Serial Today Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரகலா அபிராமியின் சிலை உள்ள இடத்தை சுத்தம் செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Feb 13 2026, 12:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karthigai Deepam Serial Today Full Episode
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today Full Episode

கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய 1121ஆவது எபிசோடில் கார்த்திக்கின் அம்மா சிலை இருக்கும் இடத்தை சுத்தம் செய்வதற்கு பயந்து எஸ்கேப் ஆக நினைத்த நிலையில் கார்த்திக்கிடம் மாட்டிக் கொண்டுள்ளார். என்ன நடந்தது என்று முழுவதுமாக பார்க்கலாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் மாமியார் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டுமென்றால் அவரது அம்மாவின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடக்க கூடாது என்று சந்திரகலா திட்டம் போட்டார்.

25
கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்

இதற்காக அவரிடமும் பந்தயமும் செய்தார். மேலும், கார்த்திக் இந்த பந்தயத்தில் தோற்றால் வீட்டை விட்டு செல்வதாக சபதம் போட்டார். கார்த்திக்கின் அம்மா அபிராமி சிலை திறப்பு விழா நடக்காமல் இருக்க சந்திரகலா அவரது கணவருடன் இணைந்து பல திட்டங்களை போட்டார். இதில் ஒன்றில் கூட சந்திரகலாவால் ஜெயிக்க முடியவில்லை. முதலாவதாக கார்த்திக்கின் இந்த இடத்தை தங்களது பெயருக்கு எழுதி வாங்க திட்டம் தீட்டினார்.

35
Karthigai Deepam Serial Latest Promo
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Latest Promo

கார்த்திக் இந்த திட்டத்தை முறியடித்து பந்தயத்தில் ஜெயித்தார். 2ஆவதாக சிலை திறப்பு விழா நடக்காமலிருக்க சிலைக்கு வெடிகுண்டு வைத்தார். கையோடு கார்த்திக்கிற்கும் போன் போட்டு சிலைக்கு வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று சிவனாண்டி சந்திரகலாவிற்கு போன் போடுவதற்கு பதிலாக கார்த்திக்கிற்கு போன் போட்டு சொல்லியுள்ளார்.

45
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today Episode

இதைத் தொடர்ந்த் கார்த்திக் உடனே அந்த வெடிகுண்டு வெடிக்காமல் இருக்க எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடித்து சிலை திறப்பு விழாவையும் சக்சஸ்புல்லாக நடத்தி முடித்து பந்தயத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் சொன்னபடி சந்திரகலாவை அம்மாவின் சிலை இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வைத்தார். இதிலிருந்து தப்பிக்க சந்திரகலா வீட்டை விட்டு எஸ்கேப் ஆக நினைத்தார்.

55
Karthigai Deepam Serial
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial

ஒரு பக்கம் சென்றால் அங்கு ரேவதி, ரோகிணி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை எப்படியோ சமாளித்து பிறகு மீண்டும் மற்றொரு பக்கமாக வெளியேற நினைத்தால் அங்கு மயில்வாகனம் நின்று கொண்டிருந்தார். அவரை எப்படியோ சமாளித்து பின்னர் மெயின் வழியாக வெளியேற நினைத்தார். அந்தப் பக்கம் கார்த்திக் நின்று கொண்டிருந்தார். பிறகு என்ன செய்ய எஸ்கேப் ஆக வேறு வழியே இல்லாமல் சிலை உள்ள இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்ததோடு இல்லாமல் கோலமும் போட்டார். இதை வீடியோவாக பார்த்த ரோகிணி மற்றும் சுவாதி இருவரும் சந்தோஷத்தில் மூழ்கினர். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கவினின் அம்மா ஏக்கம் தீருமா? விஜி - விக்ரம் சந்திப்பில் நடந்த மாற்றம்! செல்லமே செல்லமே இன்றைய மெகா எபிசோட்
Recommended image2
சத்யா - ரோகினி கல்யாணம்: நிலைகுலைந்து போன ஆதிரை! கதையை புரட்டிப் போடும் மிரட்டல் சவால்-மருமகள் சீரியலில் திருப்பம்!
Recommended image3
ஆனந்தியை கடத்தி வைத்து பழைய வஞ்சகத்திற்கு பழிதீர்க்கும் திருமூர்த்தி - சிங்கப்பெண்ணே சீரியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved