'பேட்ட' படத்திற்கு பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள, ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்: கவர்ச்சி உடையில் அஜித்துடன் அட்டகாசம் செய்த கிரண்..! இதுவரை பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு..!
 

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மீண்டும் ஷூட்டிங் பணிகள் துவங்க அனுமதி கொடுத்துள்ளதால்,  முதல் கட்டமாக ரஜினி இல்லாத காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் பல வருடங்கள் கழித்து, சூப்பர் ஸ்டாரின் வெற்றி பட நாயகிகளாக மீனா மற்றும் குஷ்புவுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளது.

மேலும் செய்திகள்: பிரபல காமெடி நடிகர் கொரோனாவால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!
 

இந்த நிலையில் இந்த படம் குறித்து, சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர் பேச உள்ள  பஞ்ச் டயலாக்குகளை அவரே எழுதியுள்ளாராம். அவர் எழுதிய வசனங்களை இயக்குனர் சிவாவிடம் தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் பேசிக்காட்டியதாகவும், சிவா வசனங்கள் அருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ’பாபா’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு ரஜினிகாந்த் பஞ்ச் வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: வித்தியாசமாக சேலை கட்டி அந்த இடத்தை காட்டிய வி.ஜே.மகேஸ்வரி..! கவர்ச்சி தெறிக்கும் கிளுகிளுப்பான கமெண்ட்ஸ்..!

கடந்த சில வருடங்களாகவே, பெரிதாக செண்டிமெண்ட் கதைகளில் நடிக்காத சூப்பர் ஸ்டாருக்கு இந்த படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப படமாக உருவாக உள்ளதாகவும்,  இந்தத் திரைப்படம் ரசிகர்களை மட்டுமின்றி தாய்மார்களையும் மிகவும் கவரும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.