பிரபல காமெடி நடிகர் கொரோனாவால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பிரபல காமெடி நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் அடுத்தடுத்து பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆரத்யாவுக்கும், பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர், அவரது காதலி மலைக்கா அரோரா, ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
அதே போல் கோலிவுட் திரையுலகை சேர்ந்த, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால், நிக்கி கல்ராணி, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பூரண குணமடைந்து மீண்டும் வரும் நிலையில், சிலர் இறந்துவிடுவது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் விக்ரம் நடித்த தூள் படத்தில் டி.டி.ஆர். வேடத்திலும், விஜய் நடித்த கில்லி படத்தில் நடுவராகவும் நடித்திருந்தவர் ரூபன். இவர் செப்டெம்பர் 21 ஆம் தேதி, கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.
இவரை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன், பிரபல மராத்தி நடிகை அஷலாட்டா கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமான, தெலுங்கு நடிகர் வேணுகோபால் கோசுரி என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் மரணமடைந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள வேணுகோபால் கோசுரி மறைவு தெலுங்கு திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தொடர்ந்து தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய... இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.