சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்தே அவருடைய ரசிகர்கள் சற்றே அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இருந்தாலும் எந்த இடத்திலும் தலைவரை விட்டுத்தரவில்லை. அவரை எப்படியாவது அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்று வரையிலும் விதவிதமாக போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். மேலும் அவரை நேரில் பார்ப்பதற்காகவும் வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். 

இன்று தீபாவளி என்பதால் தலைவர் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போயஸ் கார்டனில் இருக்கும் அவரின் வீட்டிற்கு காலை முதலே ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். இந்த நல்ல நாளில் ரசிகர்களின் ஆசையை கொடுக்க விரும்பாத ரஜினிகாந்த் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு தோன்றினார். 

வழக்கம் வீட்டின் கேட்டிற்கு முன்பு மாஸ்க் அணிந்தபடி தோன்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார். உடனே வாசலில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி பெருக்கில் ஆராவாரம் செய்தனர். ரஜினியை பார்த்த உற்சாகத்தில் தலைவா... தலைவா என முழக்கம் எழுப்பிதோடு அவர்களும் கையசைத்து வாழ்த்து கூறினர். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.