நடிகர் ரஜினிகாந்த் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று...’அவரது திரைப்படங்கள் மிக தட்டையானவை. படத்துக்குப் படம் எந்த வித்தியாசமும் இருக்காது! துவக்கத்தில் ஏழையாகவோ, ஏமாற்றப்பட்டவராகவோ இருப்பார். ஆனால் உண்மையில் அவருக்கு பல நூறு கோடி சொத்துக்கள் இருக்கும்! இடைவேளையில் உண்மை தெரிந்து, கிளைமேக்ஸுக்குள் அந்த சொத்துக்களை கைப்பற்றி, வணக்கம்! போடுவதற்கு முன் அந்த சொத்துக்களை ஏழைகளுக்கு ஒப்படைப்பார். ஸ்டீரியோ டைப் கதைகள், சீரியல் டைப் வில்லன்கள். ஆனால் ஓடுகிறதோ ஓடலையோ, கமல்ஹாசனின் படங்கள் தரத்தில் தாறுமாறானவை! சர்வதேச சினிமாக்களுக்கே சவால் விடுபவை! சினிமாவில் புதிய தொழில் நுட்பத்தை பரிசோதிப்பதில் கமல் ஒரு பேரரசன்!’ என்பார்கள். 

உள்ளபடியே இந்த விமர்சனம் மிக மிக தவறானது. கமல்ஹாசனின் திறமையையும், பரிசோதனை முயற்சிகளையும், முன்னோடி வெற்றிகளையும் துளியும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அதற்காக ரஜினியின் சினிமாக்கள் அப்டேடட் தொழில்நுட்பத்துக்கு இடம் தருபவை அல்ல! என்று சொல்லப்படுவதை ஏற்கவே முடியாது. உண்மையில் சொல்லப்போனால் ரஜினியின் சில படங்களின் மூலம் தான் மிக முக்கியமான சினிமா தொழில்நுட்பங்கள் இந்திய மற்றும் தமிழ் சினிமா உலகினுக்குள் வந்தன. அதற்கான உதாரணங்கள் இதோ....

*  தமிழ் சினிமாவில் முதன் 70 எம்.எம். படமான மாவீரன் படம் ரஜினிகாந்த் நடித்ததுதான். 
*  ரஜினியின் சிவாஜி படம் 2டி வெர்ஷனில் இருந்து 3டிக்கு மாற்றப்பட்டு திரையிடப்பட்டது.
*  கோச்சடையான் எனும் அனிமேஷன் படம் மூலம் இந்திய சினிமாவில் புதிய மைல்     கல்லை நட்டினார் சூப்பர் ஸ்டார். 
*  இந்திய சினிமாவுக்கே சி.ஜி. டெக்னாலஜியில் வகுப்பெடுத்த எந்திரன், 2.0    ஆகிய படங்களின் ஹீரோ தலைவர்தான். 
*  வருங்கால இந்தியாவை ஆக்கிரமிக்கப்போகும் ரோபோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து தயாரான ‘எந்திரன்’ படத்தின்  ஹீரோவும் நம்        தலைவரே. 
இந்த படத்தை முதலில் கமல்ஹாசனை மனதில் வைத்து வடிவமைத்திருந்தார் ஷங்கர். ஆனால் ரஜினி உள்ளே வந்தபோது ‘ஹ்ஹா! ரஜினியா, ரோபோவா?’ என்றார்கள் விமர்சகர்கள். ஆனால் சிட்டி ரோபோவாக இரண்டு சீசன்களிலும் பின்னி எடுத்திருந்தார் ரஜினி.