Asianet News TamilAsianet News Tamil

கீர்த்தியுடன் டூ மச் பாசம்..! நயன்தாராவுடன் கியூட் ரொமான்ஸ்... ஆக்ஷனில் பொறி பறக்க விட்ட 'அண்ணாத்த' ட்ரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படம் வரும் தீபாளிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

 

Super star rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe trailer released
Author
Chennai, First Published Oct 27, 2021, 7:01 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படம் வரும் தீபாளிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த, 'தர்பார்' படத்தை தொடர்ந்து, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முழு கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்குவது இவரா? ஒட்டு மொத்த போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..!

 

Super star rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe trailer released

அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'சார காற்றே' பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல், கீர்த்தி சுரேஷ் - ரஜினிகாந்தின் பாசப்பாடலும், வா சாமி பாடல் என நான்கு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்: உள்ளே போட்டிருக்கும் ஆடை தெரிய கவர்ச்சி காட்டும் ஷிவானி! நெஞ்சை நிமிர்த்தி கொடுத்த படு ஹாட் போஸ்!

 

Super star rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe trailer released

அவ்வப்போது இந்த படம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், இன்றைய தினம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கலக்கலாக தயாராகியுள்ள ட்ரைலர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அதில் தலைவர் காட்டும் பாசம், ரொமான்ஸ், பஞ்ச் டயலாக் என அனைத்திலும் கெத்து காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்: சிம்பு ஹீரோயின் மஞ்சிமாவா இது? சல்வார் அழகில் சூடேற்றி... இளம் நெஞ்சங்களை சுழட்டி போட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

 

Super star rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe trailer released

இந்த ட்ரைலர் துவங்கியதுமே ... ஆக்ரோஷமாக பெரிய அருவா கையில் வைத்து கொண்டு, தலைவர் பேசும் பஞ்ச் டயலாக்கில் தான் துவங்குகிறது. "நீ யாருங்குறது சேர்த்து வைக்குற சொத்துலையோ, உன்ன சுற்றி இருப்பவர்கள் உன் மேல வச்சிருக்குற பயத்துலையோ இல்ல... நீ செய்யுற செயல்களையும், பேசுற பேச்சுலையும் இருக்கு... இது வேத வாக்கு" என்று வார்த்தையோடு துவங்குகிறது. பின்னர் சூப்பர் ஸ்டார் பெயர் 'அண்ணாத்த' படத்தில் காளையன், ஊர் சூரக்கோட்டை என்றும், சுற்றி இருக்கும் கிராமத்தின் பிரசிடெண்ட் என்றும் ட்ரைலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: பார்த்தாலே குலை நடுங்குது... தல அஜித்தின் படு தில்லான வேற லெவல் புகைப்படம்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

மேலும் பச்சை பசேர் கிராமத்தில் இருக்கும் அழகிய அண்ணாக தலைவரும், கீர்த்தி தங்கையாகவும் நடித்துள்ளார். மிகவும் பாசமாக பார்த்து பார்த்து வளர்க்கும் தங்கைக்கு திருமணத்திற்கு பின் வரும் பிரச்சைக்காக கத்தியை கையில் எடுக்கும் சூப்பர் ஸ்டார் அந்த பிரச்சனையில் இருந்து கீர்த்தியை எப்படி மீட்டு கொண்டுவருகிறார். ரௌடிகளால் என்னென்ன பிரச்சனைகளை சந்திகிறார் என்பதே இந்த படத்தின் கதைக்களம் என்பது ட்ரைலர் மூலம் தெரிகிறது.

Super star rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe trailer released

அதே போல்... நயன்தாராவுடனான காதல், குஷ்பூ மற்றும் மீனா இருவரும் ரஜினிக்காக முட்டி மோதுவது என கலகலப்புக்கும், காமெடிக்கும் பஞ்சம் இல்லாமல் உருவாகி 'அண்ணாத்த' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இமானின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பில், மிலன் ஆர்ட் ஒர்க் மேற்கொண்டுள்ளார். சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார் திலீப் சுப்புராயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios