பார்த்தாலே குலை நடுங்குது... தல அஜித்தின் படு தில்லான வேற லெவல் புகைப்படம்..! பிரமித்து போன ரசிகர்கள்..!
தல அஜித் (Thala Ajith) (Ajithkumar) தற்போது மிக உயரிய பாறையின் நுனியில் நின்று எடுத்து கொண்ட படு தில்லான புகைப்படம் (Viral Photo) சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தல அஜித் எந்த அளவுக்கு பைக் ரேஸ் பிரியர் என்பது, அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித், சமீப காலமாகவே, ரிஃபில் ஷூட்டிங், மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் சமீபத்தில் 'வலிமை' (Valimai Movie) பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்தார்.
சமீபத்தில் டெல்லி சென்ற அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது. இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி அதாவது continents, 64 countries -சை சுத்தி வந்த மாரல் யாசர்லூ என்பவரை சந்தித்து, பைக்கிலேயே உலகம் சுற்றி வர போட்டுள்ள பிளான் பற்றி கலந்தாலோசித்ததாக, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
தற்போது மீண்டும் தன்னுடைய பைக் பயணத்தை கையில் எடுத்துள்ள அஜித்தின், அசத்தல் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் வாகா எல்லையில் அஜித் இந்திய ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டதும், பின்னர் பாலைவனம் போல் இருக்கும் இடத்தில், தல பைக் நிழலில் அமர்ந்து தண்ணீர் அருந்தும் புகைப்படமும் வெளியானது.
இதை தொடர்ந்து, தற்போது அஜித் செம்ம தில்லாக கிலிஃப்-இன் மேல் தனியாக நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். பார்த்தலே குலை நடுங்க வைக்கும் இந்த புகைப்படம் தற்போது படு வைரலாகி வருகிறது.