​​'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில்,  உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் திரைப்பட ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 

 

இதையும் படிங்க: இரவு முழுவதும் செம்ம ஹேப்பியாக இருந்த சித்ரா... அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஜனவரியில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, சட்டமன்ற தேர்தலிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அண்ணாத்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிக்க வேண்டியுள்ளன. 

 

இதையும் படிங்க: ஹேமந்த் உடனான திருமணத்தை நிறுத்த நினைத்தாரா சித்ரா?... அடுத்தடுத்து அதிர்ச்சியை அதிகரிக்கும் தகவல்கள்...!

வரும் டிசம்பர் 15ம் தேதி முதல்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்காக சென்னை டூ ஐதராபாத் தனி விமானத்தில் பறக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினிகாந்த். படப்பிடிப்பு தளத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் படக்குழுவினர் மேற்கொள்ள உள்ளனராம். இதனால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 40 நாட்களுக்கு ரஜினி ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும், இடையில் ஓய்வெடுப்பதற்காக சென்னை வந்து திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.