இந்தியாவில் அசுர வேகமெடுத்து வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 21,393 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 681 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது வரை கொரோனா தொற்றிற்கு சரியான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமனித விலகல் ஒன்றே தொற்றை கட்டுப்படுத்த சரியான வழியாகும். 

அதனால் தான் ஏப்ரல் 14ம் தேதி நிறைவடைந்த ஊரடங்கை மீண்டும் மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த கொரோனா லாக்டவுனால் திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலி சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டுமென தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனமான ஃபெப்சி கோரிக்கை விடுத்திருந்தது. 

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் லட்சங்களை வாரிக்கொடுத்தனர். ஏற்கனவே ஃபெப்சி தொழிலாளர்களின் பசியை போக்குவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். 

இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!

இதேபோன்று நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு உதவு செய்யும் படி முன்னாள் நிர்வாகிகள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஃபெப்சி தொழிலாளர்களை போலவே நலிந்த நடிகர்களுக்கும் சினிமா நடிகர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்த தகவலை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தில் உள்ள 1,500 நலிந்த கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இதற்காக 24 டன் மளிகை பொருட்களை சம்மந்தப்பட்ட நடிகர் சங்கத்திற்கு ரஜினிகாந்த் வழங்கியுள்ளார். இதன் மூலம் வேலையில்லாததால் உணவின்றி வாடும் நடிகர்கள் குடும்பங்களுக்கு உணவு தர முடியும்.